வைரலாகும் ஜாக்கிசான் புகைப்படம்.. ஆளே மாறிப்போன அதிரடி மன்னன்

தமிழில் எப்படி ஒரு  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியில் ஒரு அமிதாப் என மொழிக்கு மொழி பல சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ஒரு நட்சத்திரம் தான் ஜாக்சிசான்.

நடிகர், தற்காப்புக் கலைஞர், திரைப்படதயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட ஜாக்கிசான் ஹாங்காங்கில் பிறந்தவர். அதிரடியில் கலக்கிய ஜாக்கிசான் பிறந்த பொழுதே 5 கிலோவுக்கு மேல் இருந்ததால் பீரங்கிக் குண்டு என்று செல்லமாக அழைக்கப்பட்டார். 1970-களில் தன்னுடைய சினிமா வாழ்க்கையினைத் துவக்கிய ஜாக்கிசான் கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

ஜாக்கிசான் தனது 8 வயதில் ‘பிக் அண்ட் லிட்டில் வோங் டின் பார்‘ என்ற படத்தில் குழந்தை நட்சதிரமாக 1962-ல் அறிமுகமானார். போலீஸ் ஸ்டோரி படத்தின் மூலம் திரையுலகின் உச்சிக்குச் சென்ற ஜாக்கிசான் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் கால்பதிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து ரஷ்ஹவர், Who am I, The karate Kid உள்ளிட்ட படங்களில் நடித்து உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களைக் கவர்ந்தார்.

‘பன்னீர் புஷ்பங்கள்‘ சாந்தி கிருஷ்ணா இவரோட தங்கையா..? இது தெரியாமப் போச்சே..!

இதனால் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்திற்கு முன்னேறினார் ஜாக்கிசான். புரூஸ்லியின் மாணவரான ஜாக்கிசான் மயிர் கூச்செரியும் சண்டைக் காட்சிகளில் அசால்ட்டாக நடிப்பவர். இவர் உடலில் அடிபடாத இடங்களே இல்லை என்னும் அளவிற்கு ஆக்சன் காட்சிகளில் புகுந்து விளையாடுவார். தனது படங்களில் ஆக்சனுடன் காமெடியில் இணைந்து கலக்கிவது ஜாக்கிசானின் தனிச்சிறப்பு. இதன் காரணமாகவே மொழி கடந்து ஜாக்கிசான் படங்கள் வசூலை வாரிக்கு குவித்தது.

இப்படி உலக சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் ஜாக்கிசானின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி வைராகி இருக்கிறது. அதிரடி ஆக்சனில் பொளந்து கட்டும் நம்ம ஜாக்கிசான் தான் இவரா என அவரது ரசிகர்கள் வாயடைத்துப் போயிருக்கின்றனர். தற்போது 70 வயதைத் தாண்டிய நிலையில் முகத்தில் முதுமையுடன் அந்த கம்பீரத் தோற்றம் குறைந்து வயோதிகராக மாறிய ஜாக்கிசானின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஜாக்கிசானின் கடைசி திரைப்படம் கடந்த ஆண்டு ’HIDDEN STRIKE’ என்ற பெயரில் உலகம் முழுவதும் வெளியானது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...