தமிழ்நாடு தினம் – ஜூலை 18 ! உருவான வரலாறு தெரிஞ்சுக்க இதை படிங்க…!

நம் இந்திய நாடு 1947 ஆம் ஆண்டு விடுதலை அடைந்த பின்னர் தான்  மொழிவாரியாக தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டன.

images 4 15

அவரவர் மாநிலங்களுக்கு அவரவர் விரும்பிய பெயர்கள் சூட்டப்பட்டது. தமிழ்நாட்டிற்கு மதராஸ் என்ற பெயரே நீடித்தது. மதராஸ் மாகாணம் என்னும் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடந்தன. தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக சங்கரலிங்கனார் அவர்கள் தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். இவரது மறைவிற்குப் பின்னர் தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்கு பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.

1957ஆம் ஆண்டு திமுக முதன் முதலில் சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைக்கும் பொழுதே மதராஸ் என்னும் பெயரை மாற்றி தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்கு பெயர் வைக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் அடியெடுத்து வைத்தது ‌‌. ஆனால் பெரும்பான்மையான ஆதரவு இல்லாத காரணத்தால் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது. அதன்பின் பலர் முயற்சித்தும் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அறிஞர் அண்ணா அவர்கள்  ஜூலை மாதம் 18ஆம் தேதி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.  அதன் பின் 1968 ஜனவரி 14ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தற்போதைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு தான் 1956 நவம்பர் 1ம் தேதி மதராஸ் மாநிலமாக நமக்கு பிரிக்கப்பட்டது ‌‌அது தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது 1967 ஜூலை 18ஆம் தேதி ஆகும். இதில் பல கட்சி தலைவர்களுக்கு இடையே இருந்த முரண்பாடுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு பின் தற்போதைய திமுக ஆட்சியில் அமைந்த அரசு ஜூலை 18ஆம் தேதியே தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

தமிழ்நாடு என்னும் பெயர் எளிதில் கிடைத்து விடவில்லை பல தலைவர்களின் போராட்டங்களுக்குப் பிறகும் உயிர் தியாகங்களுக்குப் பிறகும் தான் நம் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews