இனிமேல் பாலிவுட் என்று சொல்லாதீர்கள்.. இந்தி திரையுலகினர்களுக்கு மணிரத்னம் அட்வைஸ்..!

இந்தி திரை உலகினர் இனிமேல் தங்களை பாலிவுட் திரையுலகினர் என்று சொல்ல வேண்டாம் என இயக்குனர் மணிரத்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் புரமோஷன் டெல்லியில் நடைபெற்றது என்பதும் இதில் மணிரத்னம் உட்பட குழுவினர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி நடந்த பொன்னியின் செல்வன் புரமோஷன் விழாவில் மணிரத்னம் பேசியபோது ஹிந்தி திரை உலகினர் இனிமேல் தங்களை பாலிவுட் கலை உலகினர் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றும் அனைவருமே இந்திய திரை உலகினர் என்று சொல்ல பழக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ponniyin selvan-11

பல வெளிநாடுகளில் இன்னும் இந்திய சினிமா என்றால் பாலிவுட் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் ஆனால் தற்போது படிப்படியாக மாறி வருகிறது என்றும் தென்னிந்தியாவிலும் தரமான திரைப்படங்கள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவேதான் பாலிவுட் கோலிவுட் டோலிவுட் மாலிவுட் என்று கூறுவதற்கு பதிலாக அனைவரும் இந்திய சினிமா என்று சொன்னால் உலக அளவில் நம்முடைய பெருமை நீடிக்கும் என்று மணிரத்னம் கூறியுள்ளார்.

ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது தனக்கு கோலிவுட் பாலிவுட் என்று சொல்வதில் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மணிரத்னத்தின் அறிவுரை ஏற்று இனிமேல் பாலிவுட் திரையுலகினர் தங்களை இந்திய திரை உலகினர் என்று கூறுவார்களா? அவர்களை பின்பற்றி அனைத்து மொழி திரைப்படங்கள் தயாரிப்பவர்களும் தங்களை இந்திய திரையுலகினர் என்று அழைப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் ஒவ்வொரு மாநிலமாக திரையுலகினர் பிரித்துக் கொள்வதில்லை என்பதும் இந்தியாவில் மட்டுமே இது நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...