உடல்நலம்

கருப்பு எள்ளின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

8d56dbd1890472c0417d493e79957069

எள்ளில் கருப்பு எள், வெள்ளை எள் என இரண்டு வகைகள் உண்டு, இந்த எள் வகைகளில் நாம் அதிகம் பயன்படுத்துவது கருப்பு எள்ளினைத் தான். அத்தகைய எள்ளில் உள்ள சத்துகள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.

அதாவது கருப்பு எள் மாதவிடாய் நின்ற பெண்களின் உடலினை வலிமைப்படுத்துவதாக உள்ளது. மேலும் இதில் உள்ள அதிக அளவு கால்சியமானது எலும்பு மற்றும் பல்லின் வலிமையினை அதிகரிப்பதாக உள்ளது.

மேலும் எள் இதயத்தினை அனைத்துவிதமான நோய்களில் இருந்து தற்காத்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் கருப்பு எள்ளினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால், உடலின் இரும்புச் சத்து அதிகரிக்கும்.

இரும்புச் சத்து அதிகரித்தால் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான நுனி முடி வெடித்தல், இளநரை, முடி கொட்டுதல், செம்பட்டையான தலைமுடி போன்றவற்றிற்கு சிறந்த தீர்வினைக் கொடுக்கின்றது.

இதையும் பார்க்க: பச்சைப்பயறில் உள்ள நன்மைகள் இவைகள்தான்!

மேலும் எள் நம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதாகவும், மலக் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாகவும் உள்ளது.  மேலும் எள் புற்றுநோய்க் கிருமிகளை உடலில் நுழைய விடாமல் தடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 உடல் எடையினைக் குறைக்க நினைப்போரு எள்ளினைக் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விறுவிறுவென குறையும்.

Avatar photo
Staff