உடல்நலம்

இனிக்கும் தேனே!


38a15b0a1a49ae025c5c6dcc5a9e7f8f

இயற்கையிலேயே கிடைத்த பொருட்களை கொண்டு வாழ்ந்தபோது நோய்களுக்கு ஆளாகமல் வாழ்ந்தான் மனிதன். ஆனால், உணவை சமைக்க கற்றுக்கொண்டபின், ருசிக்கு அடிமையாகி விதம்விதமாய் உண்ண ஆரம்பித்தபின் புதுப்புது நோய்களுக்கு ஆளாகி அல்லல் படுகிறான். நம் முன்னோர்கள் உணவையே மருந்தாய் பயன்படுத்தினர், இன்று மருந்தையே உணவாய் உட்கொள்ளும் அவல நிலைக்கு ஆளாகி இருக்கின்றோம்.

இன்று கிடைத்தற்கரிய தேனின் மருத்துவ பயன்பாட்டை பார்க்கலாம்.

f7426fea547b6b7275c1296445e32537

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக்கி, அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுத்து, அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து கொதிக்க விட்டு, சுண்டக் காய்ந்ததும் எடுத்து, வடிகட்டி அருந்த வேண்டும்.  இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.

ஒரு டீ ஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொண்டு, அதில் அரை டீ ஸ்பூன் தூள் எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்று நோய் குணமாகும்.

அகத்திக்கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேக வைத்து, அதைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.

ஆலமரத்திலிருந்து பால் எடுத்து, அதில் ஒரு டீ ஸ்பூன் பாலுனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.  அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும். வயிற்றிலுள்ள புண் குணமாகும்.

குப்பைமேனிச் செடியின் வேரை இடித்து இட்டுக் கஷாயமாக்கி அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து  அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.

பத்து கொன்றை மரப் பூக்களை 100 மில்லி பசும் பாலில் இட்டு காய்ச்சி, பூ நன்றாக வெந்ததும், வடிகட்ட வேண்டும். அதனுடன்  ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அதனால் வயிற்று கோளாறுகள் வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும். சீதள பேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.

தேனின் பயன்பாடுகள் தொடரும்…

Avatar photo
Staff