வனிதா செஞ்ச உதவி.. தடைகளை தாண்டி காதலியை இயக்குனர் ஹரி கரம்பிடித்த கதை..

தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகராக இருப்பவர் விஜயகுமார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடிகர் மற்றும் குணச்சித்திரம் உட்பட பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஜயகுமாரின் வாரிசுகளும் திரை துறையில் கால் பதித்திருந்தனர். அவரது மகன் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் மிஷன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

அதே போல விஜயகுமாரின் மகளும், இயக்குனர் ஹரியின் மனைவியுமான ப்ரீத்தா விஜயகுமாரும் கூட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மஞ்சுளாவின் மகள்தான் ப்ரீத்தா விஜயகுமார். இவருடைய சகோதரிகள் தான் ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் வனிதா விஜயகுமார். ஒரு பெரிய நடிகரின் மகளாக இருந்தும் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவராகவே முயற்சி செய்து சில படங்களில் வாய்ப்புகள் பெற்றார்.

தெலுங்கு திரையரங்க ’ருக்மணி’ என்ற திரைப்படத்தில் அவர் அறிமுகமானாலும் தமிழில் அவர் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான ’சந்திப்போமா’ என்ற திரைப்படத்தில் நளினி என்ற கேரக்டரில் நடித்தார். சூர்யா ஜோடியாக அவர் நடித்த இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் உள்பட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

preetha vijayakumar2

அதன் பிறகு அவர் விஜயகாந்த் நடித்த ’தர்மா’ என்ற திரைப்படத்தில்  நாயகியாக நடித்தார். இந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்ற போதிலும் ப்ரீத்தா கேரக்டருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் ’பொண்ணு வீட்டுக்காரன்’ என்ற படத்தில் நடித்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’படையப்பா’ திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்தார். இந்த படத்தின் இரண்டாம் பாதியில் அவருடைய கேரக்டருக்கு ஓரளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்

இதன் பிறகு சுயம்வரம், காக்கை சிறகினிலே, அல்லி அர்ஜுனா, புன்னகை தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் அவர் சில மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். அதில் ஒரு சில தெலுங்கு படங்கள் சிறந்த வெற்றி பெற்றிருந்தது.

நடிகை ப்ரீத்தா விஜயகுமார் கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் அவர் திரையுலகிலிருந்து முழுவதுமாகவே விலகிவிட்டார். கடந்த 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு 22 வருடங்களாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

preetha vijayakumar1

திரை உலகில் ஓரளவு பிசியாக இருந்த நிலையில் தான் அவர் தற்செயலாக இயக்குனர் ஹரியை சந்தித்தார். அவருடன் நட்புடன் பழகினார். அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில் ப்ரீத்தா வீட்டில் அவருடைய திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தனது காதலை தந்தையிடம் சொல்வதற்கே பயந்து கொண்டு இருந்தார் ப்ரீத்தா.

அப்போது ஹரி தான் வனிதாவிடம் சென்று உங்கள் தங்கையை நான் காதலிக்கிறேன் எங்களது திருமணத்தை நீங்கள் தான் நடத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ப்ரீத்தா மற்றும் வனிதா ஆகிய இருவரும் சகோதரிகள் மட்டுமல்ல சிறந்த தோழிகளாகவும் இருந்ததால் ப்ரீத்தாவின் காதலை புரிந்து கொண்ட வனிதா தனது வீட்டின் எதிர்ப்பை மீறி தனது வீட்டில் உள்ளவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்.

ஆரம்பத்தில் விஜயகுமார், இயக்குனர் ஹரிக்கு தனது மகளை கொடுக்க சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும் ப்ரீத்தா பிடிவாதமாக இருந்ததால் அதன் பிறகு அவருடைய சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னால் தான் ஹரி இயக்கத்தில் உருவான ’சிங்கம்’ படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகின.

திருமணத்திற்கு பின் தனது கணவரின் இயக்குனர் பணிக்கு உதவியாகவும் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் அவர் உள்ளார். திருமணத்திற்கு பின்னர் அவருக்கு சில வாய்ப்புகள் வந்த போதிலும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.  இருப்பினும் ப்ரீத்தா விஜயகுமார் நடித்த சில படங்கள் ரசிகர்கள் மனதில் என்றும் நினைவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.