ஹேப்பி ஆனிவர்சரி கொண்டாடும் கொரோனாத் தடுப்பூசி.. இந்திய அரசு செஞ்ச மரியாதையைப் பாருங்க!

கொரோனாத்  தொற்றிற்கு நம்மிடம் இருக்கும் பெரிய தீர்வு தடுப்பூசிதான். தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றது.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அறிமுகமானபோது பொதுமக்கள் அதனை செலுத்திக் கொள்ளத் தயக்கம் காட்டினர்.

அதன்பின்னர் சினிமாப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தாங்களாக முன் வந்து கொரோனாத் தடுப்பூசியினை செலுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

அதன்பின்னர் மக்கள் ஆர்வமாக கொரோனாத் தடுப்பூசிகளை அரசு மருத்துவமனையில் துவங்கி அரசுப் பள்ளிகள், டோல்கேட்டுகள், சமுதாயக் கூடங்கள், ரயில் நிலையங்கள் எனப் பல இடங்களில் முகாம்கள் நடத்தி கொரோனாத் தடுப்பூசியை செலுத்தியது.

கோவாக்சின், கோவிஷில்டு, ஸ்புட்னிக் என மூன்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கொரோனாத் தடுப்பூசி செலுத்தத் துவங்கி இன்றுடன் ஓராண்டுகள் ஆகிறது/

இதுவரை இந்தியாவைப் பொறுத்தவரை 150 கோடி டோஸ்கள் செலுத்தி மாபெரும் சாதனையினை செய்துள்ளது . மொத்தமாக 156.76 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தடுப்பூசி திட்டத்தின் ஓராண்டு நிறைவு நினைவு தினமாக இன்று சிறப்பு தபால் தலையை மத்திய அரசு வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.