ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்க விடும் ஜி.பி முத்து ரசிகர்கள்! அப்படி என்ன நடந்திருக்கும்..

திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னை பன்றி என கூறியதாக நடிகர் ஜி.பி முத்து தற்போழுது வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

யூடியூப்பில் டிக் டாக் வீடியோக்கள் மூலமாக பிரபலமானவர் தான் ஜி.பி முத்து. இவரின் செத்த பயலே.. நாரப்பயலே என்ற வார்த்தையை யாராலும் மறக்க முடியாது. இந்த வசனத்தின் மூலம் பிரபலமடைந்த இவர் சொந்த யூடியூப் சேனல் நடத்தி அதில் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இவர் சேனலுக்கு சுமார் 9 லட்சத்திற்கும் மேல் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் அனைவரின் கவனத்தைப் பெற்றார். மேலும் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடிக்க முடியாமல் ஒரே வாரத்தில் வெளியேறிய இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் பிக்பாஸ் ஷிவானி எட்டு தோட்டாக்கள் படத்தின் நாயகன் வெற்றி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான பம்பர் திரைப்படத்தில் ஜிபி முத்து நடித்திருந்தார்.

இந்த படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும் படத்தை பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் விமர்சனம் செய்திருந்தார். அதில் பம்பர் படத்தை தொடர்ந்து பாராட்டி வந்த அவர் கடைசியில் பன்றி ஒன்றை உள்ளே விட்டு படத்தை கெடுத்து விட்டார்கள் என்றும் அதனை கண்டுபிடித்து அங்கேயே அடித்து கொண்டு இருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும் என கூறியிருந்தார்.

மாவீரன் படத்திற்கு தமிழ் மொழியில் விஜய் சேதுபதி – தெலுங்கில் யாரு தெரியுமா?

இந்த நிலையில் தன்னை பன்றி என கூறிவிட்டதாக நடிகர் ஜி.பி முத்து வீடியோ வெளியிட்டு கடுமையாக திட்டி தீர்த்துள்ளார். அதாவது ப்ளூ சட்டை மாறன் தன்னை தான் பன்றி என்று கூறுகிறார் என்றும், பன்றி கடித்தால் என்ன ஆகும் தெரியுமா என்றும் கூறி உள்ளார்.

மேலும் தேவையில்லாமல் என்னை சீண்டி விட்டதாக கூறிய ஜி.பி முத்து உன்னை சும்மா விடமாட்டேன் என தனது வழக்கமான பாணியில் வறுத்தெடுத்துள்ளார். இதனை பார்த்த ஜி.பி முத்து ரசிகர்கள் கமெண்ட் இல் சமாதானம் செய்து வருகின்றனர். மேலும் ப்ளூ சட்டை மாறனை கெட்ட வார்த்தையால் திட்டிய படி கமெண்ட்களும் பதிவிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...