மாவீரன் படத்திற்கு தமிழ் மொழியில் விஜய் சேதுபதி – தெலுங்கில் யாரு தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் தான் ‘மாவீரன்’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் கலக்கலான அப்டேட்களால் படம் பார்வையாளர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதே நேரத்தில் தெலுங்கில் ‘மகாவீருடு’ என்ற தலைப்பில் அதே நாளில் படம் வெளியாகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் தவிர சரிதா, மிஷ்கின், அதிதி சங்கர், யோகி பாபு, மோனிஷா உள்ளிட்ட திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். ‘மாவீரன்’ படத்துக்கு வித்து அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய, பரத் சங்கர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் செய்துள்ளார்.

இந்த படத்தில் சங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடித்துள்ளார். விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் களமிறங்கியுள்ளார் அதிதி. மேலும் இந்த படத்திற்காக அதிதி 25 இலட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Raviteja

புஷ்பா பட பாடலுக்கு நடனமாடும் ஷாருக்கான்! வைரல் வீடியோ இதோ!

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பில் விஜய் சேதுபதி வசனகர்த்தாவாக உள்ளார் என சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார், அதே சமயம் தெலுங்கில் வெளியாகும் மகாவீருடு படத்தின் வசனகர்த்தா யாரு தெரியுமா? அது நடிகர் ரவி தேஜா தான்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில்  விஜய் சேதுபதி, ரவி தேஜா என முன்னணி நட்சத்திரங்கள் குரல் கொடுத்திருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.