தெறிக்க விட்ட விஜயின் அரசியல் பாடல்..! விசில் போடு பாடலில் இதெல்லாம் வருகிறதா…?

கோட் (GOAT) படத்தில் விசில் போடு சாங் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலில் விஜய் அரசியலில் இறங்கி கட்சி ஆரம்பித்ததைக் கொண்டாடும் வகையில் பாடல் எழுதப்பட்டுள்ளது.

தற்போது விஜய் தனது 68வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கி உள்ளார் ஜெயராம், பிரபு, தேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்பட பலரும் நடித்து வருகின்றனர்.

கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ் என்ற ஆங்கிலப் பெயரின் சுருக்கமே கோட். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். புதுச்சேரி கேரளா ஆகிய இடங்களில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இப்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழ்ப்புத்தாண்டையொட்டி இந்தப் படத்திற்கான ஒரு சூப்பர் ஹிட் சாங் வெளியானது. விசில் போடு என்ற அந்தப் பாடல் வெளியாகி சில மணித்துளிகளுக்குள் மில்லியன் கணக்கில் நெட்டிசன்கள் பார்த்து ரசித்து விட்டனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. மதன் கார்க்கி எழுதிய இந்த வரிகளில் விஜய் அரசியலில் களம் இறங்குவதையும் அவருக்கு உள்ள வரவேற்பையும் தெரிவிக்குமாறு எழுதப்பட்டுள்ளது.

GOAT
GOAT

பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா, அதிரடி கிளப்பட்டுமா? கேம்பைன் ஒண்ணு திறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா? என்று சொல்ல ஒரு குரல் கேம்பைன்னு சொன்னன்னு கேட்க, உனக்கு மப்புல அப்படி தான் கேட்கும்… சேம்பைன்னு தான் சொன்னேன் என்று விஜய் சொல்ல விசில் போடு என்று ஆட்டம் களைகட்டுகிறது. பாடலில் பிரசாந்த், பிரபுதேவா குழுவினருடன் விஜய் தனது வழக்கமான புயல்வேக நடனத்தில் தூள் கிளப்புகிறார்.

இது ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்துள்ளது. உனக்கு நீயே கால் பண்ணிக்கோ, உன் லைஃப்ப டீல் பண்ணிக்கோ… தண்டவாளம் தேயாது, இந்த பூமி மாயாது, ஏ லாஸ்ட் செட் உள்ளே வர, நம்ம பார்ட்டி ஓயாதுன்னு விஜய் பாடி தன் கட்சியின் வலிமையை உணர்த்துவது போல பாடலில் வரிகள் எழுதப்பட்டுள்ளது.

GOAT
GOAT

சினிமா வேறு. அரசியல் வேறு. என்றாலும் இப்போது இருக்கும் சூழலில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் அரசியலில் களம் காணும் விஜய்க்கு ஆதரவு தருவார்களா என்று சொல்ல முடியாது. அவர்கள் இப்போது வேறு வேறு கட்சிகளில் இருப்பார்கள். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் தளபதியின் ஆட்டத்தை..!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...