‘கில்லி-2’ எடுத்திருக்க வேண்டியது… மிஸ் ஆகிருச்சு…நாகேந்திர பிரசாத் பகிர்வு…

நாகேந்திர பிரசாத் நடன இயக்குனர் மற்றும் நடிகராவார். இவர் தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் டான்ஸ் மாஸ்டர் முகூர் சுந்தரத்தின் இளையமகனும், பிரபல நடன இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரத்தின் இளைய சகோதரரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பாம்பே’ திரைப்படத்தில் ‘ஹம்மா ஹம்மா’ என்ற பாடலில் தோன்றியது மூலம் பிரபலமானவர். இவர் நடனம் நளினம் மிக்கதாக இருக்கும். அதே போல் ‘ரிதம்’ திரையாடத்தில் வரும் ‘தனியே தன்னந்தனியே’ என்ற பாடலிலும் நடனமாடியிருப்பர்.

மேலும் இவர் ‘குஷி’, ‘கில்லி’, ‘மாஸ்டர்’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்திருப்பார். மேலும் விஜய் டிவியின் ‘மாயா மச்சிந்திரா’ என்ற தொடரில் நடித்திருப்பார். அதை தொடர்ந்து விஜய் டிவியின் ‘ஜோடி நம்பர் 1, சீசன் 7’ இல் பங்கேற்று அரையிறுதி சுற்றில் வெளியேறினார்.

கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் நாகேந்திர பிரசாந்தின் காம்போ பார்ப்பவர்கள் ரசிக்கும்படியாக இருந்தது. தற்போது ஒரு நேர்காணலில் நாகேந்திர பிரசாத் கில்லி படத்தைப் பற்றியும் அதன் இரண்டாம் பாகம் பற்றிய திட்டத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், கில்லி படம் என்றால் அப்படி பட்டாஸ் மாதிரி இன்றளவும் நினைவிற்கு வரும். நடிகர் விஜயுடன் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போ மாஸ்டர் படத்தில் நடிக்கும் போது கூட ‘கில்லி-2’ படமாக்கவேண்டும் என்று பிளான் பண்ணினார்கள். ஆனால் அதற்குள் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். அதனால் ‘கில்லி-2’ எடுத்திருக்க வேண்டியது மிஸ் ஆகிருச்சு என்று பகிர்ந்திருந்தார் நாகேந்திர பிரசாத்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...