சச்சின் – காம்ப்ளி நட்பை படமாக்க போகும் கெளதம் வாசுதேவ் மேனன்!!!

கெளதம் மேனனின் படமான துருவ நட்சத்திரம் நீண்ட நாள் போரட்டத்திற்கு பின் நவ.24ல் திரைக்கு வர உள்ளது. அந்த படத்திற்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்பதை பார்க்க கெளதமின் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

காதலை மையமாக கொண்ட ஆக்‌ஷன் படங்கள், காதலை மட்டும் முதன்மையாய் வைத்து படங்கள் எடுப்பது வல்லவர் கெளதம் மேனன். மின்னலே, விண்ணாத்தாண்டி வருவாயா போன்ற ஆல் டை ஃபேரைட் காதல் கதைகளும், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற ஆக்‌ஷன் பேக்ட் படங்களையும் கொடுப்பதில் கெளதம் கை தேர்ந்தவர்.

மணிரத்தினத்தின் படங்களில் இருக்கக்கூடிய ஒரு அழகியல் கெளதம் மேனன் படங்களிலும் பார்க்க முடியும். அதற்கு காரணம் மணிரத்தினத்தால் ஈர்க்கப்பட்டு சினிமாவிற்கு வந்ததனாலோ என்னவோ கெளதம் படங்களிலும் அதைக்காண முடியும்.

மணிரத்தினத்தின் ‘பம்பாய்’ படத்தில் வரும் ஒவ்வொரு சீனையும் மானப்படம் செய்து காட்சிகளை குறிப்பெடுத்தும் சினிமாவிற்கு வருமுன் தயாராகி இருக்கிறார். பின் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர்‘மின்னலே’ மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

ஏறுமுகமாவே சென்ற அவருடைய கேரியரில் படங்கள் தோல்வியடைய ஆரம்பித்தது. தயாரிப்பாளர் பிரச்சனை என சினிமா பாதை தடம் மாறியது. அவருக்கு ஏற்பட்ட பொருளாதார சறுக்கங்களிலிருந்து மீள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபகாலத்தில் பல படங்களில் நடித்துவிட்டார் கெளதம்.

லியோ, விசாரணை என அவர் நடிக்கும் படங்களின் பட்டியல் நீளமானது. திரைக்கு வரும் படங்களில் கெளதம் இல்லாத படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இனி நடிப்பதை காட்டிலும் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்த போவதாக, கெளதம் தெரிவித்துள்ளார். இருப்பினும் நடிக்கும் அவசியம் ஏற்பட்டால் நடிப்பேன் என்று கூறி இருக்கிறார்.

தற்போது நடை பெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் வர்ணனை ஒன்றில் பங்கேற்றார் கெளதம் வாசுதேவ் மேனன் . அப்போது பேசிய கெளதம் தன்னுடைய அடுத்தப்படம் கிரிக்கெட் சம்பந்தப்பட்டதுதான். சச்சின் டெண்டுல்கர் – காம்ப்ளி நட்பினை மையப்படுத்தி கதை ஒன்றை எழுதி உள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்தை விரைவில் இயக்குவேன் என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் ‘ஜோஷூவா இமை போல் காக்க’ படத்தை இயக்கி வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews