தனுஷுக்கும் எனக்கும் செட்டாகல!.. பெரிய நஷ்டம் ஏற்பட அந்த விஷயம் தான் காரணம்.. கெளதம் மேனன் பளிச்!..

ரொமெண்டிக் இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் பல வெற்றிப் படங்களை இயக்கி தற்போது நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷுக்கும் எனக்கும் செட் ஆகாது என வெளிப்படையாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இயக்குநர், கதாசிரியர் , நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார்.

தனுஷுக்கும் எனக்கும் செட்டாகல:

ரொமெண்டிக் இயகுநரான இவர் பெரும்பாலும் காதல் கதையை மையமாக கொண்டு பல படங்களை இயக்கியுள்ளார். அவரது படங்களுக்கு வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் குவிந்தது. பிறகு பிரீத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

மின்னலே திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் கௌதம் மேனன். அதை தொடர்ந்து சூர்யாவின் காக்க காக்க,வாரணம் ஆயிரம் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, சரத்குமாரின் பச்சைக்கிளி முத்துச்சரம், சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும், தமிழ் படங்கள் சிலவற்றை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்துள்ளார். பின்பு நடுநிசி நாய்கள், வெப்பம், தங்க மீன்கள், நீ தானே என் பொன்வசந்தம் போன்ற படங்களை தயாரித்துள்ளார். பெரும்பாலான அவரது படங்களுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர்.

படங்களை தயாரிக்க தொடங்கிய கௌதம் மேனன் பல தோல்விகளை சந்தித்தார். அதை சரி செய்ய கிடைக்கும் அனைத்து படங்களிலும் நடித்து வந்தார். ரிலீசாகும் எல்லா படங்களிலும் நடித்திருகிறாரே இவருக்கு எவ்வளவு தான் கடன் இருக்கும் என கலாய்த்து வந்தனர். கடைசியா சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் அவருக்கு ஒரு கம்பேக் கொடுத்தது.

மேலும் தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்ட படத்தை இயக்கியிருந்தார். காதல் திரில்லராக உருவாக்கப்பட்ட அந்த படம் படு தோல்வி அடைந்தது. அப்படத்தில் மேகா ஆகாஷ், சசிகுமார், சுனைனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கௌதம் மேனன் இயக்ககியிருந்த துருவ நட்சத்திரம் படத்தின் வேலையினால் இப்படத்தின் ரிலீஸ் தாமாதமானது தான் தோல்விக்கு காரணம் எனப் பலரும் கூறினர்.

இந்நிலையில் அண்மையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த கௌதம் மேனன், எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் ஷூட்டிங் லேட் ஆனதால் தனுஷ் அப்செட்டாயிட்டார். மேலும் எனக்கும் அவருக்கும் இடையிலான வைப் செட் ஆகவில்லை. ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பின் போதே எதோ குறை இருப்பது போல் தோன்றியது, இருந்தாலும் ஏதாவது அதிசயம் நடந்து படம் ஓடிவிடும் என்ற நம்பிக்கையில் படத்தை முடித்து ரிலீஸ் செய்தேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...