ஒரே நாளில் 4 பேட்ஸ்மேன்கள் சதம்.. இங்கிலாந்து உலக சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் நான்கு பேட்ஸ்மேன்கள் சதம் அடித்த உலக சாதனையை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிகழ்த்தியுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டி நகரில் தொடங்கிய நிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

england century1அந்த அணியின் ஆகிய நான்கு பேட்ஸ்மேன்களும் அதிரடியாக சதம் அடித்துள்ளனர். ஜாக் கிராவ்லே 122 ரன்கள்ம், பென் டக்கெட் 107 ரன்களும், ஒலியே போப் 108 ரன்களும், ஹாரி புரூக் 101 ரன்களும் அடித்துள்ளனர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி 75 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் நான்கு பேட்ஸ்மேன்கள் சதமடித்து உலக சாதனை செய்ததை அடுத்து இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.