ஆடுன 7 போட்டியில் பொல்லார்ட் ரெக்கார்டிற்கு ஆப்பு வைத்த ஜேக் ஃப்ரேஷர்.. இளம் புயலின் அதிரடி அட்ராசிட்டி..

இந்த சீசனில் இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் அளவுக்கு வெளிநாட்டை சேர்ந்த பல வீரர்களும் ஐபிஎல் தொடரில் தடம் பதித்து பட்டையை கிளப்பி வருகின்றனர். ஸ்டெப்ஸ், சுனில் நரைன், பிலிப் சால்ட் என பல வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் நிலையில் இவர்களுக்கெல்லாம் டாப்பில் இருந்து வருகிறார் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேஷர்.

இவருக்கு தற்போது 22 வயதே ஆகும் நிலையில் டெல்லி அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி பட்டையை கிளப்பி வருகிறார். இதுவரை 7 போட்டிகள் மட்டுமே தனது ஐபிஎல் சீசனில் ஆடி உள்ள ஜேக் ஃப்ரேஷர், 309 ரன்களை அடித்துள்ளார். அதிலும் நான்கு அரைச்சதங்கள் அடங்கி இருப்பது தான் தற்போது பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

சமீபத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் ஆரம்பத்திலேயே டெல்லியில் ரன் ரேட் உயர முக்கிய காரணமாக இருந்த ஜேக் ஃப்ரேஷர் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். டெல்லி அணியில் தொடக்க வீரராக இருந்த டேவிட் வார்னரை மாற்றிவிட்டு ஒரு இளம் வீரர் தேர்வானதும் ஆரம்பத்தில் அதிக விமர்சனங்கள் தான் இருந்தது.

ஆனால் வார்னரையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு ஆஸ்திரேலிய இளம் வீரர் டெல்லி அணிக்காக இப்படி பட்டையை கிளப்பி வருவதுடன் மட்டுமில்லாமல் முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளையும் அடித்து வருகிறார். ராஜஸ்தான் பந்து வீச்சாளரான ஆவேஷ் கானின் ஒரே ஓவரில் நான்கு ஃபோர்கள் மற்றும் இரண்டு சிக்சர்களுடன் 28 ரன்கள் சேர்த்து ஆட்டம் காண வைத்திருந்த ஜேக் ஃப்ரேஷர், இதுவரை ஆடி உள்ள ஏழு போட்டியிலேயே பல ஜாம்பவான்கள் இடம் பெற்றுள்ள ஐபிஎல் தொடரின் முக்கியமான சாதனை பட்டியலில் இரண்டாவது இடத்தை எட்டிப் பிடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் 20 அல்லது அதற்கு குறைந்த பந்துகளில் அதிக அரைச்சதம் அடித்த பட்டியலில் மும்பை அணியின் முன்னாள் வீரர் பொல்லார்ட் முதல் இடத்தில் உள்ளார் (4 முறை). இவர்களுக்கு அடுத்தபடியாக டிராவிஸ் ஹெட் மூன்று முறையும், இஷான் கிஷன், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, டேவிட் வார்னர், ஜெய்ஸ்வால் என பலரும் தலா இரண்டு முறை அரைசதம் அடித்திருந்த நிலையில் தான் ஏழே இன்னிங்சில் மூன்று முறை அடித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

அதிலும் இரண்டு போட்டியில் பதினைந்து பந்துகளில் அரைச்சதம் அடித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக குறைந்த பந்துகளில் அரைச்சதம் அடித்த வீரர் என்ற சிறப்பையும் ஏற்கனவே அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் பல வீரர்களும் ஏராளமான ஐபிஎல் போட்டிகளில் இந்த உயரத்தை எட்ட, முதல் சீசனிலேயே சாதித்துள்ளார் ஜேக் ஃப்ரேஷர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...