உலகக்கோப்பை வரலாற்றில் இதுதான் முதல்முறை.. ஒரே அணியில் 500 ரன்கள் எடுத்த 3 வீரர்கள்..!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டத்தை தொடங்கிய நிலையில் சுப்மன் கில் நான்கு ரன்களுக்கு அவுட் ஆனார்

இந்த நிலையில் தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடி வருகின்றனர் என்பதும் 8 ஓவர் முடிவில் இந்தியா 61 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதிப்போட்டி நடைபெற்று வரும் நிலையில் அரிய தகவல் கிடைத்துள்ளது. அது என்னவெனில் இந்திய அணியின் மூன்று வீரர்கள் உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக ஒரே தொடரில் 500 ரன்களுக்கு மேல அடித்துள்ளனர்.

கடந்த 48 ஆண்டுகளாக உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை ஒரே அணியில் உள்ள மூன்று வீரர்கள் ஒரு தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால் அந்த வரலாற்றை விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டிக்கு முன்பே மூன்று வீரர்களும் 500 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இறுதி போட்டிகயில் எவ்வளவு ரன்கள் எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
Bala S

Recent Posts