வேலைப் பளுவால் தந்தை ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை.. கண்ணீர் சிந்தும் சிறுமி!

கொரோனா அச்சுறுத்தலால் நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றி வருகிறோம். வொர்க் ஃப்ரம் ஹோம் முறையானது எளிதானதாக வெளியில் இருந்து பார்ப்போருக்குத் தெரிகின்றது.

ஆனால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை பார்த்து வந்த பணியாளர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் 12 முதல் 15 மணி நேரம் வேலைபார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதனால் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள முடிவதில்லை, முறையாக தங்களுக்கான ப்ரேக்குகளை எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

பணியாளர்களுடன் குடும்பத்தாரும் பெரிய அளவில் கஷ்டப்படுகினர். அந்தவகையில் சிறுமி ஒருவர் தன் தந்தை சரியாக சாப்பிடுவதில்லை என்று கூறி கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது.

அதாவது அந்த சிறுமி தன் தந்தை ஒருநாள் முழுவதும் வேலை பார்ப்பதாகவும் இரவு ஒருவேளை மட்டும் உணவு சாப்பிடுவதாகவும் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு வயிற்றைப் பட்டினி போட்டு உடலைக் கெடுத்துக் கொள்வதாக சோகமாகக் கூறியுள்ளார்.

அந்த சிறுமி தந்தையை நினைத்து கதறி அழும் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பெண் குழந்தை தாயின் மறு உருவம் என்று பாராட்டி வருகின்றனர்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews