‘மணப்பாறை மாடு கட்டி.. மாட்டுக்கார வேலா…’ விவசாயிகளின் கவிஞராகத் திகழ்ந்த மருதகாசி!

தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதும் ஒவ்வொரு கவிஞரும் அடிப்படையில் பாடல்கள் இயற்றினாலும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் இயற்றுவதில் வல்லவர்களாக இருந்தார்கள். கவிஞர் கண்ணதாசனை தத்துவப் பாடல்களுக்கும், புரட்சிப் பாடல்களுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், காதல் பாடல்களுக்கு வாலியும், கிராமியப் பாடல்களுக்கு வைரமுத்துவும் அவரவர் காலங்களில் வெற்றி வாகை சூடினர்.

அந்த வகையில் விவசாயிகளுக்காகவே எண்ணற்ற பாடல்களை இயற்றி இன்றும் வயல்வெளிகளில் முணுமுணுக்கும் பாடல்களுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவர்தான் மருதகாசி. 1950-களின் பிற்பகுதியில் கண்ணதாசனுக்கு முன் புகழ்பெற்ற பாடலாசிரியராகத் திகழ்ந்தார். ஜி ராமனாதன், கே வி மகாதேவன், டி ஆர் பாப்பா என அன்றைய முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான வெற்றிப் பாடல்களை வழங்கிய இவர், மேலக்குடிகாடு என்ற சிற்றூரில் ஒரு வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

“மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏருபூட்டி”, “ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே”, “மாட்டுக்கார வேலா உன் மாட்ட கொஞ்சம் பாத்துக்கடா” என்று விவசாயப் பெருமக்களின் பெருமையை கூறும் இந்தப் பட்டியல் நீளும். திருச்சி லோகனாதன் தான் அமைத்திருந்த மெட்டுகளுக்கு, இவர் எழுதியிருந்த பாடல்களை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பாடிக் காட்ட, மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து அழைப்பு வந்தது அ.மருதகாசிக்கு.

உலகநாயகனுக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா? கைவந்த கலையாக பரதமும், நடனமும் அமைந்தது இப்படித்தான்.

“பெண்ணெனும் மாய பேயாம் பொய் மாதராய்” என்று ஆரம்பமாகும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான “மாயாவதி” படப்பாடல்தான் இவர் எழுதிய முதல் திரைப்படப்பாடல். இப்படம் வெளியான ஆண்டு 1949. இதனைத் தொடர்ந்து “தூக்கு தூக்கி”, “பாசவலை”, “அலிபாபாவும் 40 திருடர்களும்”, “மங்கையர் திலகம்”, “தாய்க்குப் பின் தாரம்”, சதாராம், “அமரதீபம்”, “மல்லிகா”, “நீலமலைத்திருடன்”, “சாரங்கதாரா”, “உத்தமபுத்திரன்”, “பாகப்பிரிவினை”, “பாவை விளக்கு”, “மன்னாதி மன்னன்”, என 1950களில் ஏராளமான படங்களுக்கு எண்ணற்ற வெற்றிப் பாடல்களைக் கொடுத்து முன்னணி பாடலாசிரியராக இருந்தார்.

அதன் பின் கண்ணதாசனின் வருகை இவர் புகழை சற்றே மங்கச் செய்தது. தொடர்ந்து இயக்குநர்கள் கண்ணதாசனைப் பயன்படுத்த இவருக்கு சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பின் தேவர் தயாரித்த “தேர்த்திருவிழா”, “விவசாயி” வெள்ளிக்கிழமை விரதம் என்று தொடர்ந்து தேவர் தயாரித்து வந்த படங்களில் இவரது பாடல்கள் இடம் பெற்று வந்தன. ஏறக்குறைய 250 படங்களுக்கு மேல் பணியாற்றிய இவர் கிட்டத்தட்ட 4000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார் மருதகாசி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...