தலைவர் படத்தில் இணைந்த ஃபஹத் பாசில்… அப்போ படம் இப்போவே பாதி ஹிட்டான மாதிரிதான்!

ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிக்கும் அடுத்தடுத்த படங்களை இயக்குவது யார் என தெரிந்து கொள்வதில் ரசிகர்களும், சினிமாத்துறையினரும் ஆர்வமாக உள்ளனர். தலைவர் 171-ஐ மாஸ்டர், விக்ரம் படங்களின் பிளாக் பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டாரின் 170வது படத்தினை லைகா புரொடெக்‌ஷன்ஸ் தயாரிக்கின்றனர். தலைவரின் 170வது படத்தினை இயக்கும் வாய்ப்பு ’ஜெய் பீம்’ புகழ் டி.ஜே ஞானவேல்-க்கு கிடைத்துள்ளது. இப்படத்தில் பாகுபலி புகழ் ராணா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், சார்பட்டாவில் மாரியம்மாவாக வாழ்ந்த துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மலையாளப் படங்களை தன்னுடைய எதார்த்த நடிப்பால் ரசிக்க வைத்தவர் ஃபஹத் பாசில். அவர் நடிக்கும் படங்களில் தன்னுடைய நடிப்பு இயல்பானதாக இருக்கவேண்டும் அதே சமயம், மக்கள் மனதில் அந்த கேரக்டர் இடம் பிடிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பவர். மலையாள சினிமாவில் இவர் அறிமுகமான படம் சரியான வரவேற்பினை பெறவில்லை. அந்த படத்தின் தோல்விக்கு பின் 7 வருடங்களுக்கு சினிமாவை விட்டு விலகி இருந்தார் ஃபஹத் பாசில். அதன்பின் வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்ததன் காரணமாக தொடர் வெற்றிகளை பெற்று வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’வேலைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் ஃபஹத் பாசில். அதைத் தொடர்ந்து சூப்பர் டீலக்ஸில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து கலக்கிருப்பார். பின் கமலுடன், விக்ரம் படத்தில் இணைந்து மிரட்டி இருந்தார். இதன் மூலம் மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் தமிழிலும் பிரதான நடிகனாவிட்டார் ஃபஹத் பாசில்.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னனில் நடித்திருந்தார். உதயநிதி ஸ்டாலின், வடிவேலுவுடன் இணைந்து நடிந்திருந்தார். அப்படத்திற்கு பின் நடிப்பின் அரக்கன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஃபஹத் பாசில் தலைவர் 170ல் இணைந்துள்ளார் எனும் செய்தியை அப்படத்தினை தயாரிக்கும் லைகா புரோடெக்‌ஷன்ஸ் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews