சிவன் சன்னதிக்குள் நாகம் பட்டுக்கோட்டை அருகே பரபரப்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பரக்கலக்கோட்டையில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே திங்கட்கிழமை இரவு 12 மணிக்கு மட்டுமே திறக்கப்படும். உலகில் எந்த சிவாலயத்திலும் இப்படி ஒரு நடை முறை இல்லை. முனிவர்கள் மூன்று பேருக்கு ஏற்பட்ட பிரச்சினையை சிவபெருமான் குருவாக இருந்து அவர்களின் சண்டையை தீர்த்து வைத்த இடம் இது.

வாரம் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் இக்கோவிலுக்கு சுற்றுவட்டார மக்கள் இரவு 12 மணி வரை விழித்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்வர். வருடத்தின் ஒரு நாள் தைப்பொங்கல் அன்று இந்த கோவில் முழுவதும் திறக்கப்படும்.

இந்நிலையில் ஒரு அதிசயமாக இக்கோவிலில் ஸ்வாமி சன்னதி அருகே கடந்த பொங்கலன்று வந்த நாகம் அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே இருக்கிறதாம் யாருக்கும் எந்த தொந்தரவும் அந்த நாகம் கொடுப்பதில்லையாம். அதிசயமான நடைமுறை கொண்ட இக்கோவிலில் இது போல அதிசயம் நடப்பது இங்கு வரும் பக்தர்களுக்கு பெரிய ஆச்சரியம் கலந்த ஆன்மிக அனுபவம் என்றால் மிகையில்லை.

Published by
Staff

Recent Posts