எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்டா.. கதிர் கேட்ட கேள்வியால்.. கதையே மாறுதா?

சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக மாரிமுத்து நடித்த பழைய காட்சிகள் ஆங்காங்கே ரியாக்சனுக்காக இணைக்கப்பட்டிருந்தன. எதுவுமே பேசமால் குணசேகரன் வீட்டில் அமைதியாக பார்ப்பது போலவும், கேட்டுக்கொண்டு இருப்பது போலவும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் நேற்றைய எபிசோடில் கதிர் கேட்ட கேள்வி பலரையும் இனி சீரியல் எப்படி போகும் என்பதை யோசிக்க வைத்துள்ளது. நேற்றை எபிசோடில் கதிரின் ஆட்டம் அதிகமாக இருந்தது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

செப்டம்பர் 17ம் தேதி நடந்த எதிர்நீச்சல் சீரியல் எபிசோடில், ஆரம்ப காட்சியிலேயே, ஈஸ்வரி தான் மோட்டிவேசனல் ஸ்பீச் கொடுத்ததால் வந்த வருமானத்தில், அவரது மகன் தர்ஷனுக்கு செகெண்ட் ஹேண்ட் பைக் வாங்கி கொடுத்தார். அதனை கோவிலில் போய்பூஜை போட்டுவிட்டு கிளம்புகிறார். அப்போது ஒரு பெண் ஈஸ்வரியின் மோட்டிவேஷன் வீடியோவை தான் பார்த்தேன். வாழ்க்கையில் அது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும் ஈஸ்வரியை பாராட்டி அவரோடு புகைப்படம் எடுப்பார். பின்னர் தர்ஷனுடன் ஈஸ்வரியும் அங்கிருந்து கிளம்பி பைக்கில் வீட்டிற்கு வருவார்,

குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சல்.. இனி எப்படி இருக்க போகுது.. இன்று புரோமோ பார்த்தீங்களா

அப்போது வீட்டில் ஈஸ்வரி மற்றும் தர்ஷனை காணாததால் குணசேகரன் கையில் இருக்கும் போனை பார்த்த படியே அவ்வப்போது முறைத்துக் கொண்டு மாடியில் இருப்பார். அதுபோல கதிரும் மாடியில் நின்று பார்த்துக் கொண்டே பார்ப்பார். அதை தொடர்ந்து ஜனனியும் சக்தியும் வீட்டிற்கு வெளியே வந்து ஈஸ்வரி மற்றும் தர்ஷனை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

அப்போது தர்ஷன் பைக்கில் வந்து இறங்குகிறார். பைக்கை பார்த்ததும் சக்தி பைக் சூப்பராக இருக்கிறது என்று சொல்வார். இது அம்மா எனக்காக வாங்கி கொடுத்து இருக்காங்க என்று தர்ஷன் மகிழ்ச்சியுடன் கூறுவார். இது புது பைக்கா என்று சக்தி கேட்க, இல்லை இது பழைய பைக் என்று கூறுவார். அதற்கு சக்தி பார்க்க புதுசு போல் இருககிறது. நான் ஓட்டி பார்க்கவா என்று சக்தி கேட்பார். பின்னர் அந்த பைக்கை சக்தி ஓட்டி பார்ப்பார்.

இதை எல்லாம் குணசேகரன் ஒரு பக்கமும் கதிர் ஒரு பக்கமும் மடியில் நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறகு பைக்கை வீட்டிற்குள் கொண்டு வந்ததும் அந்த நேரத்தில் ஸ்கூலில் இருந்து வரும் தர்ஷினி பைக்கை பார்த்ததும் பைக்கில் ஏறி உட்கார்ந்து சூப்பரா இருக்கு என்பார். அப்போது வீட்டிற்குள் இருந்து கதிர் ஞானம் கரிகாலன் மூவரும் வெளியே வேகமாக வருவார்கள்.

அப்போது வழக்கம் போல், பத்தவச்சுட்டயே பரட்டை என்பது போல், கரிகாலன் இது என்ன அசிங்கமா இருக்கு பொம்பள புள்ள பைக்கும் மேல கால போட்டு இப்படி உட்கார்ந்து இருக்கா என்று ஏற்றி விடுகிறார். அதற்கு நந்தினியும் ரேணுகாவும் இதில் என்ன அசிங்கம் இருக்கு பொம்பள புள்ள பைக் ஓட்டுனா பைக் போகாதா என்று திட்டுவார். அதற்கு ஞானம் எல்லோரையும் திட்டுகிறார்.

இப்படி பைக் வாங்கி கொடுத்து இருப்பது நல்லா இல்ல. யார் கிட்ட கேட்டுட்டு பைக் வாங்கினீங்க? என்று ஈஸ்வரியை திட்ட அதற்கு சக்தி அதான் அவன் வச்சிருந்த பைக்கை புடுங்கி வைத்து விட்டாயே என்று சொல்ல அதற்கு கதிர் நான் பிடுங்கி வைப்பேன் பிறகு கொடுப்பேன். ஆனா அவன் எப்படி இந்த பழைய பைக்கை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கொண்டு வரலாம் என்று திட்டுவார்.

அப்போது ஞானம் அப்பா செத்த பிறகு 13 வயசுல இருந்து எங்க அண்ணன் தான் எங்கள கஷ்டப்பட்டு பார்த்துக்கிட்டாரு என்று சொல்வார். அதற்கு தர்ஷன் உங்க அப்பா செத்து கஷ்டப்படுத்துனாரு ஆனா இந்த ஆளு இருந்து எங்களை கஷ்டப்படுத்துறாரு என்று சொல்வார், அதற்கு ஞானம் தர்ஷனை அடித்து விடுகிறார். பிறகு அனைவரும் திட்டி சண்டையிட்டுவிட்டு வீட்டிற்கு வருவார்கள்.

அதைத் தொடர்ந்து தர்ஷனும் தர்ஷனியும் பேசிக் கொண்டிக்கும் காட்சிகள் காட்டப்படும். அப்போது தர்ஷினி இடம் தர்ஷன் நான் ஜீவானந்தம் சாரை பார்த்தேன். அவர் ரொம்பவே நல்லவர் என்று சொல்லிக் கொண்டிருக்க, இதை எல்லாம் கதிர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு தர்ஷினி நமக்கு அந்த ஜீவானந்தமே அப்பாவா வந்திருக்கக் கூடாதா? என்று சொல்வார். அதைக் கேட்டு கோபமான கதிர் அங்கு ஆவேசமாக சண்டை போடுவார். அந்த தாடிக்காரன்தான் உனக்கு அப்பாவா வேணுமா? என்று கேட்க அங்கே வரும் ஈஸ்வரி கோபத்தில் கதிரை திட்டுகிறார். உன்னை அசிங்கப்படுத்த ரொம்ப நேரம் ஆகாது.உன்னை வெட்டி போட்டுடுவோம் என்று ஈஸ்வரி பேசுகிறார்.

இதையெல்லாம் ரூமிற்குள் இருந்து குணசேகரன் கேட்டுக் கொண்டே அமைதியாக இருப்பார். ஆனால் எதுவுமே வாய் திறக்கவில்லை. பிள்ளைகளுக்கு அப்பனா அந்த தாடிக்காரன் வரணும்னு சொல்லிக்கிட்டு இருக்குது. ஆனா ரூமிற்க்குள் இருக்கிற இந்த மனுஷன் இதுக்கு ஒண்ணுமே பேசாம இருக்காரு, எல்லாத்தையும் கேட்டுட்டு அமைதியா இருக்காரு என்று கதிர் புலம்பிக் கொண்டிருக்க, அப்போதும் கடைசியாக குணசேகரன் யோசிப்பது போன்று காட்சிகளுடம் எபிசோடு முடிவடைந்துள்ளது.

கடைசி எபிசோடில் குணசேகரன் எதுவும் பேசவில்லை. இனி ஏதாவது பேசுவது போன்ற காட்சிகள் இன்றைய எபிசோட்டில் இருக்குமா என்பது தெரியவில்லை. பேச வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. அதேநேரம் புது குணசேகரன் அறிமுகமாக அதிக வாய்ப்பு இருக்கிறது. எனினும் இன்றைய எபிசோட்டில் பெரும் பூகம்பம் வெடிக்க போகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...