தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக, பெண்ணுரிமை மற்றும் மண்ணுரிமையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது ‘வன்னி’ திரைப்படம். செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் மற்றும் சுக்கிரன் டாக்கீஸ் நிறுவனங்கள் சார்பில் S.A. கார்த்திகேயன் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.*
இப்படத்தில் நடிகை இனியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பெண் போராளியின் உணர்வுபூர்வமான போராட்டத்தையும், பெண்களின் உரிமைகளையும் மண்ணின் மீதான உரிமையையும் பேசும் வகையில் வலுவான கதைக்களத்துடன் இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் இசையமைப்பாளராக இலங்கையைச் சேர்ந்த வாகீசன் ராசைய்யா பணியாற்றுகிறார். லண்டனில் ஆல்பம் பாடல்கள் மூலம் புகழ்பெற்ற இவர், முதன்முறையாகத் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இசையமைப்பதுடன் இப்படத்தின் பாடல்களையும் எழுதியுள்ள இவர், இரண்டு பாடல்களையும் பாடியுள்ளார். படத்தின் கதைக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ற வகையில் பாடல்கள் உருவாகி வருகின்றன.
இப்படத்தில் இனியாவுடன் கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, விக்ரம்’வசந்தி்,சாய் ரத்னா, பிரியங்கா தினேஷ், பாலாஜி முருகதாஸ், சாட்டனா, ஹரிஷ்குமார், ஜெஃப்ரின், ஜெகதீஷ், ரூபினா, ரூபிசினா, ரெபெக்கா சித்ரா, பாய்ஸ் ராஜன், சரவண சுப்பையா, அஜித் கவுஸ்சி, மீசை ராஜேந்திரன், முத்துக்குமாரசாமி, சுப்பிரமணிய சிவா, பால கணேஷ், ஜீவராவி, சந்தான பாரதி, பிரதிபா, G.R. நந்தகுமார், ரவிச்சந்திரன், ரவி சங்கர், ராஜாராமன், ஹரிஸ், பிரியதர்ஷினி, T.S.R., பயில்வான் ரங்கநாதன், மல்லேஷ், ரிக்கமல், கிஷோர், வசந்த், விசித்திரன், பிரவீன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், பலர் இளம் கலைஞர்களாகவும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் கதை, திரைக்கதை, இயக்கம் – S.A. கார்த்திகேயன், இயக்க மேற்பார்வை – S.K. ஜீவா, இசை மற்றும் பாடல்கள் – வாகீசன் ராசைய்யா, ஒளிப்பதிவு – A. குமரன், படத்தொகுப்பு – பிரேம் குமார், கலை இயக்கம் – சுகி தேவராஜ், லைன் புரொடியூசர் – ஆம்பூர் J. நேதாஜி, வசனம் – K.N. பத்மராஜா, மேக்கப் – ரகுராமன், ஸ்டில்ஸ் – வினோத், நடனம் – நோபல், சண்டைப் பயிற்சி – தளபதி தினேஷ், ஆடை வடிவமைப்பு – காசி ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
மேலும், இணை இயக்குநராக தியாகராஜன், உதவி இயக்குநர்களாக S.K. ராகேஷ், R. முகமது பைசல், MK அருண் மற்றும் R. கணபதி, DI பிரிவில் ஜாக் மற்றும் துரை, அவுட்டோர் யூனிட்டாக விமலா அவுட்டோர் யூனிட், ஸ்பாட் எடிட்டராக அஜித் ஆகியோர் பணியாற்றுகின்றனர். மக்கள் தொடர்புப் பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார். விளம்பர வடிவமைப்பை பவன் (சிந்து கிராபிக்ஸ்) மேற்கொள்கிறார். அலுவலக நிர்வாகப் பணிகளை ஆனந்த், சதீஷ் குமார், ஹரிஹரன் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
தற்போது கும்பகோணம், இலங்கை, நாகப்பட்டினம், பூம்புகார் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கதையின் களத்திற்கும், கதாபாத்திரங்களின் இயல்புக்கும் ஏற்ற வகையில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
பெண்ணுரிமை, மண்ணுரிமை ஆகியவற்றைப் பேசும் அழுத்தமான கதைக்களம், இனியா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பு, வாகீசன் ராசைய்யாவின் இசை எனப் பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகி வரும் ‘வன்னி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





