இந்த விஷயத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பண்ணுங்க… நடிகர் சிம்பு அட்வைஸ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிம்பு. இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இளம் வயதிலேயே சிம்புவுக்கு கிடைத்தது.…

simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிம்பு. இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இளம் வயதிலேயே சிம்புவுக்கு கிடைத்தது. அதன்படி குழந்தை நட்சத்திரமாக 1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு.

2002 ஆம் ஆண்டு இவரது தந்தை டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிம்பு. தொடர்ந்து கோவில், மன்மதன், வல்லவன், சரவணா, விண்ணைதாண்டி வருவாயா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சிம்பு.

அதைத்தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு விட்டு மாநாடு, ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார் சிம்பு. தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. சமீபத்தில் அவரது பிறந்தநாளுக்கு கூட மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளிவந்தது. தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் சிம்பு நடித்த Thug Life படம் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு வாழ்க்கைக்கு தேவையான ஒரு அட்வைஸை கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், நீங்கள் ஒருத்தருக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யுங்கள். நீங்கள் செய்த உதவியை அதை பெற்ற சிலர் நினைவில் வைத்துக்கொண்டு உங்களுக்கு மரியாதை செலுத்தலாம். சிலர் அதை மறந்து விட்டு உங்களை ஏறி மிதித்துக் கொண்டு கூட செல்லலாம். ஆனால் நீங்கள் உதவி செய்கிறீர்கள் என்றால் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்ளாமல் எனக்கு உதவி செய்வது பிடிக்கும் ஆனால் உதவி செய்கிறேன் என்ற மனநிலையில் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் சிம்பு.