Retro Review: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, ஸ்வாசிகா, ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்து இன்று வெளியாகியுள்ள ரெட்ரோ படத்தின் விமர்சனம் பற்றி பார்ப்போம்.
கதை: அப்பாவுக்காக ரவுடிசம் செய்யும் சூர்யா காதலி பூஜா ஹெக்டேவுக்காக மனம் திருந்தி ஒரு நல்ல வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார். ஆனால், அதே அப்பாவால் அவருக்கு பிரச்சனை வர அதை அவர் எப்படி சமாளித்தார் என்பதுதான் படத்தின் கதை.
கங்குவா படம் சரியாக போகாத நிலையில் சூர்யாவுக்கு இப்படம் நல்ல கம்பேக் படமாகவே அமைந்திருக்கிறது. சூர்யா பல காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். பூஜாஹெக்டேவின் நடிப்பை பாராட்டியே ஆகவேண்டும். இதுவரை அழகு பொம்மையாகவே வலம் வந்து கதாநாயகனுடன் டூயட் ஆடிக்கொண்டிருந்த பூஜா ஹெக்டேவுக்கு நடிக்க நல்ல வாய்ப்புள்ள கதாபாத்திரம். அவரும் அதை சரியாகவே செய்திருக்கிறார்.

தனது மனைவி ஸ்வாசிகா தத்தெடுக்கும் வளர்க்கும் சூர்யாவை பிடிக்காத போதும், அவன் தனக்காக சண்டை போட்ட போது அவனை மகனாக ஏற்றுக்கொள்ளும்போதும், அந்த மகன் தன்னை விட்டு போகிறான் என தெரிந்தபின் அவனின் காதலியை கொல்ல முடிவு செய்யும் போதும் ஜோஜு ஜார்ஜ் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றபடி பிரகாஷ்ராஜ், நாசர் போன்றவர்களுக்கு படத்தில் பெரிய வேலை இல்லை.
சூர்யாவுக்கு சிரிக்கவே தெரியாது என்கிற கான்செப்ட்டை வைத்து படத்தை நகர்த்தியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். வழக்கமான அவரின் ஸ்டைலில் மேக்கிங் நன்றாகவே இருக்கிறது. ஆனால், சூர்யா சிரிக்க துவங்கியதும் காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது. தளபதி படத்தையும் கிளாடியேட்டர் படத்தையும் கொஞ்சம் உல்டா செய்தது போல் திரைக்கதை எழுதி இருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். அது நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பு, சந்தோஷ் நாராயணைன் இசையில் வரும் கனிமா பாடல் மற்றும் பின்னணி இசை. ஸ்ரேயாஷ் கிருஷ்ணாவில் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பெரிய பிளஸ். கதை ஒரே நேர்க்கோட்டில் செல்லாமல் கிளை கதை போல தடம் மாறுவது பெரிய மைனஸ். சில இடங்கள் வைத்துள்ள குறியீடுகளும் ரசிகர்களை குழப்புகிறது. படத்தின் எடிட்டிர் தனது வேலையை சரியாக செய்திருந்தால் நிறைய காட்சிகளை வெட்டியிருக்கலாம். ஸ்ரேயா வந்து ஆடும் பாடலும் ஈர்க்கவில்லை.
சூர்யாவின் நடிப்புக்காகவும், கார்த்திக் சுப்பாராஜின் மேக்கிங்கிறாகவும் கண்டிப்பாக தியேட்டரில் ஒருமுறை ரெட்ரோவை பார்க்கலாம். படத்தின் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக அமைந்த்திருந்தால் ரெட்ரோ ஒரு சூப்பர் ஹிட் படமாகவே அமைந்திருக்கும்.