ரெடின் கிங்ஸ்லி பற்றி எனக்கு அப்போவே தெரியும்… சிம்பு ஓபன் டாக்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிம்பு. இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இளம் வயதிலேயே சிம்புவுக்கு கிடைத்தது.…

simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிம்பு. இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இளம் வயதிலேயே சிம்புவுக்கு கிடைத்தது. அதன்படி குழந்தை நட்சத்திரமாக 1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு.

2002 ஆம் ஆண்டு இவரது தந்தை டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிம்பு. தொடர்ந்து கோவில், மன்மதன், வல்லவன், சரவணா, விண்ணைதாண்டி வருவாயா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சிம்பு.

அதைத்தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு விட்டு மாநாடு, ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார் சிம்பு. தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. சமீபத்தில் அவரது பிறந்தநாளுக்கு கூட மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளிவந்தது. தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் சிம்பு நடித்த Thug Life படம் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு ரெடின் கிங்ஸ்லியை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், உங்கள் எல்லோருக்கும் கோலமாவு கோகிலாவில் இருந்து தான் ரெடின் கிங்ஸ்லியை தெரியும். ஆனால் எனக்கு வேட்டை மன்னன் படத்தில் இருந்து அவரை தெரியும் அப்போதே நெல்சனிடம் இவர் மிகப்பெரிய காமெடியனாக வருவார் என்று நான் கூறுவேன். அப்போது நெல்சன் சிரிப்பார். ஆனால் இப்போதெல்லாம் நெல்சன் ரெடின் கிங்ஸ்லி இல்லாமல் படம் எடுப்பதே இல்லை என்று புகழ்ந்து பேசி இருக்கிறார் சிம்பு.