தியாகராஜசுவாமிகளை தவறாக கமல் பேசிய விவகாரம்- பிரபல பக்தி பாடகர் கடும் தாக்கு

By Staff

Published:

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடனான ஒரு கலந்துரையாடலில் சங்கீத உலகின் பிதாமகன் என போற்றப்படும் தியாகராஜ சுவாமிகளை கமல் பிச்சைக்காரர் என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசி இருந்தார்.

a1724549cc4427779cd7bbcb8cdd3613

இது சங்கீத உலகை சார்ந்த பலருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. கர்நாடிக் சங்கீதம் பயின்றவர்கள், திரைப்பட பாடல்கள் பாடுபவர்கள் பலருக்கு தியாகராஜரே குரு. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா களை கட்டும். உலக அளவில் பல சங்கீத வித்வான்கள் இங்கு வருகை புரிந்து தியாகராஜ சுவாமியை வழிபடுவார்கள்.

இதற்கு ஒரு சில கர்நாடிக் பாடகர்களிடம் இருந்து மட்டும்தான் எதிர்ப்பு வந்துள்ளது. பெரும்பாலானவர்கள் கமலின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் கமலின் இந்த பேச்சுக்கு பிரபல பக்தி பாடகர் வீரமணி ராஜு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இதோ அவர் பேசியுள்ள வீடியோ.

Leave a Comment