பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் 10: வீட்டுக்குள் நுழைந்த 19 போட்டியாளர்கள் யார் யார்? முழு பட்டியல்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 செப்டம்பர் 6, 2026 அன்று தொடங்கியது. விஜய் சேதுபதி தொடர்ந்து மூன்றாவது சீசனாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் சின்னத்திரை, சினிமா, மாடலிங், சமூக வலைதளம் உள்ளிட்ட பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

இந்த முறை போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விதத்திலும் மாற்றம் இடம்பெற்றது. Grand Launch நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் குழுக்களாக அறிமுகப்படுத்தப்பட்டு, பார்வையாளர்களின் வாக்கெடுப்பு மூலம் வீட்டுக்குள் செல்லும் வாய்ப்பு தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பொதுமக்களில் இருந்து போட்டியாளர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட ‘தி காமன் மேன்’ நிகழ்ச்சியின் மூலம் ஜேசன் கௌஷி, முனியம்மாள், ஷாமா ஆகிய மூவரும் இந்த சீசனில் இடம்பெற்றுள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் 10 போட்டியாளர்கள் முழு பட்டியல்

லக்ஷ்மி பிரியா
சாத்திகா
பிரித்விநாத்
ஜாவீத் ஷெரிப்
ஜேசன் கௌஷி
முனியம்மாள்
ஷாமா
முத்தழகி
அஸ்மிதா நீலமேகம்
அவினாஷ் அசோக்
பிளாக் பாண்டி
வினோத்பாபு
சாந்தினி தமிழரசன்
சவின்யா வேலு
குமரன் தங்கராஜன்
ராகவ் ரங்கநாதன்
தன்யா பல்லத்
முகேஷ் எம்.கே
‘அடாவடி’ அன்சார்

விஜய் சேதுபதி Grand Launch நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தினார்.

19 போட்டியாளர்களின் விவரங்கள்:

1. லக்ஷ்மி பிரியா

பிக் பாஸ் 10 போட்டியாளர் - லட்சுமி பிரியா
பிக் பாஸ் 10 போட்டியாளர் லட்சுமி பிரியா

சின்னத்திரை நடிகையான லக்ஷ்மி பிரியா, ‘மகாநதி’ தொடரின் மூலம் அறியப்பட்டவர். பன்னிக்குடி, பத்துதல உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

2. சாத்திகா

பிக் பாஸ் 10 போட்டியாளர் - சாத்திகா
பிக் பாஸ் 10 போட்டியாளர் சாத்திகா

நடிகையான சாத்திகா, Grand Launch-ல் நடைபெற்ற ஆரம்பத் தேர்வு சுற்றின் மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

3. பிரித்விநாத்

பிக் பாஸ் 10 போட்டியாளர் - பிரித்விநாத்
பிக் பாஸ் 10 போட்டியாளர் பிரித்விநாத்

பிரித்விநாத், ஜாவீத் ஷெரிப் மற்றும் பிரஷாந்த் ரங்கசாமியுடன் நடைபெற்ற தேர்வு சுற்றில் பங்கேற்றார். பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் பிரித்விநாத் மற்றும் ஜாவீத் தேர்வு செய்யப்பட்டனர்.

4. ஜாவீத் ஷெரிப்

பிக் பாஸ் 10 போட்டியாளர் - ஜாவீத் ஷெரிப்
பிக் பாஸ் 10 போட்டியாளர் ஜாவீத் ஷெரிப்

மாடலிங் மற்றும் நடிப்புத் துறையுடன் தொடர்புடைய ஜாவீத் ஷெரிப், Grand Launch-ல் நடைபெற்ற தேர்வு சுற்றின் மூலம் வீட்டுக்குள் நுழைந்தார்.

5. ஜேசன் கௌஷி

பிக் பாஸ் 10 போட்டியாளர் - ஜேசன் கௌஷி
பிக் பாஸ் 10 போட்டியாளர் ஜேசன் கௌஷி

ஜேசன் கௌஷி, ‘தி காமன் மேன்’ நிகழ்ச்சியின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர். தூத்துக்குடியைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

6. முனியம்மாள்

பிக் பாஸ் 10 போட்டியாளர் - முனியம்மாள்
பிக் பாஸ் 10 போட்டியாளர் முனியம்மாள்

முனியம்மாள், ‘தி காமன் மேன்’ நிகழ்ச்சியின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மூன்று போட்டியாளர்களில் ஒருவர். பொதுமக்கள் பிரிவிலிருந்து பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.

7. ஷாமா

பிக் பாஸ் 10 போட்டியாளர் - ஷாமா
பிக் பாஸ் 10 போட்டியாளர் ஷாமா

ஷாமா, ‘தி காமன் மேன்’ மூலம் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு போட்டியாளர். ஜேசன் கௌஷி மற்றும் முனியம்மாளுடன் இணைந்து பொதுமக்கள் பிரிவைச் சேர்ந்த மூவரில் ஒருவராக உள்ளார்.

8. முத்தழகி

பிக் பாஸ் 10 போட்டியாளர் - முத்தழகி
பிக் பாஸ் 10 போட்டியாளர் முத்தழகி

மாடலான முத்தழகி, ‘மிஸ் பெங்களூர் 2021’ பட்டத்தை வென்றவர். Grand Launch தேர்வு சுற்றின் மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

9. அஸ்மிதா நீலமேகம்

பிக் பாஸ் 10 போட்டியாளர் - அஷ்மிதா
பிக் பாஸ் 10 போட்டியாளர் அஷ்மிதா

அஸ்மிதா நீலமேகம், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாகவும் சமூக வலைதளப் பிரபலமாகவும் அறியப்படுகிறார்.

10. அவினாஷ் அசோக்

பிக் பாஸ் 10 போட்டியாளர் - அவினாஷ் அசோக்
பிக் பாஸ் 10 போட்டியாளர் அவினாஷ் அசோக்

சின்னத்திரை நடிகரான அவினாஷ் அசோக், ‘கயல்’ தொடருடன் தொடர்புடையவர். Grand Launch-ல் நடைபெற்ற தேர்வு முறையின் மூலம் வீட்டுக்குள் நுழைந்தார்.

11. பிளாக் பாண்டி

பிக் பாஸ் 10 போட்டியாளர் - பிளாக் பாண்டி
பிக் பாஸ் 10 போட்டியாளர் பிளாக் பாண்டி

நகைச்சுவை நடிகரான பிளாக் பாண்டி, ‘கனா காணும் காலங்கள்’, ‘அங்காடித் தெரு’ உள்ளிட்ட படைப்புகளின் மூலம் அறியப்பட்டவர்.

12. வினோத்பாபு

பிக் பாஸ் 10 போட்டியாளர் - வினோத் பாபு
பிக் பாஸ் 10 போட்டியாளர் வினோத் பாபு

வினோத்பாபு, சின்னத்திரை நடிகர் மற்றும் எழுத்தாளர். இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக இடம்பெற்றுள்ளார்.

13. சாந்தினி தமிழரசன்

பிக் பாஸ் 10 போட்டியாளர் - சாந்தினி
பிக் பாஸ் 10 போட்டியாளர் சாந்தினி

நடிகையான சாந்தினி தமிழரசன், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர். பிக் பாஸ் தமிழ் 10-ல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

14. சவின்யா வேலு

பிக் பாஸ் 10 போட்டியாளர் - சவின்யா
பிக் பாஸ் 10 போட்டியாளர் சவின்யா

சவின்யா வேலு, நடிகையாக அறியப்படுகிறார். Grand Launch தேர்வு சுற்றின் மூலம் இந்த சீசனில் இடம்பிடித்துள்ளார்.

15. குமரன் தங்கராஜன்

பிக் பாஸ் 10 போட்டியாளர் - குமரன்
பிக் பாஸ் 10 போட்டியாளர் குமரன்

சின்னத்திரை நடிகரும் நடனக் கலைஞருமான குமரன் தங்கராஜன், பிக் பாஸ் தமிழ் 10 போட்டியாளர்களில் ஒருவர்.

16. ராகவ் ரங்கநாதன்

பிக் பாஸ் 10 போட்டியாளர் - ராகவ்
பிக் பாஸ் 10 போட்டியாளர் ராகவ்

ராகவ் ரங்கநாதன், நடிகர் மற்றும் நடனக் கலைஞராக அறியப்படுகிறார். பிக் பாஸ் தமிழ் 10 போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.

17. தன்யா பல்லத்

பிக் பாஸ் 10 போட்டியாளர் - தன்யா பல்லத்
பிக் பாஸ் 10 போட்டியாளர் தன்யா பல்லத்

தன்யா பல்லத், சமூக வலைதளப் பிரபலமாக அறியப்படுகிறார். ‘ரிசார்ட்’ வெப் தொடருடனும் தொடர்புடைய இவர், இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

18. முகேஷ் எம்.கே

பிக் பாஸ் 10 போட்டியாளர் - முகேஷ் எம்.கே
பிக் பாஸ் 10 போட்டியாளர் முகேஷ் எம்.கே

முகேஷ் எம்.கே, திரைப்படத் துறையுடன் தொடர்புடையவர். பிக் பாஸ் தமிழ் 10 போட்டியாளர்களில் ஒருவராகியுள்ளார்.

19. ‘அடாவடி’ அன்சார்

பிக் பாஸ் 10 போட்டியாளர் - அடாவடி அன்சார்
பிக் பாஸ் 10 போட்டியாளர் அடாவடி அன்சார்

சின்னத்திரை நடிகரும் நகைச்சுவைக் கலைஞருமான ‘அடாவடி’ அன்சார், ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையவர்.

பிக் பாஸ் 10-ல் போட்டியாளர்கள் எப்படி தேர்வு செய்யப்பட்டனர்?

இந்த சீசனின் Grand Launch-ல் போட்டியாளர்களை வீட்டுக்குள் அனுப்புவதற்கே பார்வையாளர்களின் நேரடி வாக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டது.

சில சுற்றுகளில் போட்டியாளர்கள் குழுக்களாக அறிமுகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு பார்வையாளர்கள் வாக்களித்தனர். அதிக வாக்குகளைப் பெற்றவர்கள் வீட்டுக்குள் செல்லும் வாய்ப்பைப் பெற்ற நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற சிலர் மேடையிலேயே வெளியேறினர்.

இதன் மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கான தொடக்க நிலையிலேயே பார்வையாளர்களின் வாக்கு முக்கியத்துவம் பெற்றது.

‘தி காமன் மேன்’ மூலம் வந்த மூன்று பேர்

பிக் பாஸ் தமிழ் 10-ன் முக்கியமான புதிய முயற்சிகளில் ஒன்று ‘தி காமன் மேன்’.

பொதுமக்களில் இருந்து போட்டியாளர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட இந்த சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் ஜேசன் கௌஷி, முனியம்மாள், ஷாமா ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன் மூலம் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் பொதுமக்கள் பிரிவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட மூவரும் இந்த சீசனில் இணைந்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் மூன்றாவது சீசன்

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்றாவது சீசனாகத் தொகுத்து வழங்குகிறார். 8-வது சீசனில் தொகுப்பாளராகப் பொறுப்பேற்ற அவர், 9-வது சீசனைத் தொடர்ந்து தற்போது 10-வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

Avatar photo
Staff