ரொம்ப நாளைக்கு அப்புறம் மீண்டும் தன்னுடைய வேலையை தொடங்கிய சுருதிஹாசன்!!

By Vetri P

Published:

ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்றி கொடுத்து ரசிகர்களை ஓரளவிற்கு தன்வசமாக சேர்த்துக்கொண்டவர் தான் நடிகை சுருதிஹாசன். இவர் உலகநாயகன் கமலஹாசனின் மகள் என்று சினிமாவில் தெரியபட்டார்.

அதன் பின்பு இவர் நடிகர் விஜய் உடன் புலி என்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும் தனுசுடன் 3 என்ற திரைப்படத்தில் நடித்து மேலும் ரசிகர்களை தன்வசமாக சம்பாதித்து வைத்தார். இதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் மெல்ல மெல்ல குறைய அவர் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் அதிக ஆர்வத்தினை காட்டினார்.

மேலும் இவர் பிளே பேக் சிங்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக இவர் காதலருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகிய பெரும் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் பல நாட்களுக்குப் பின்பு மீண்டும் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக காணப்படுவதாக தெரிகிறது. அதற்கு உதாரணமாக மீண்டும் தனது போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

அதிலும் அந்த போட்டோக்கள் கவர்ச்சியாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்துக் கொண்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/Cfk8ju2jgUk/?utm_source=ig_web_copy_link

Leave a Comment