சினிமாவிற்கு முற்றுப்புள்ளி…. நடிப்பிலிருந்து ஒய்வு எடுக்க போகும் விஜய்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் 3 ஆண்டுகளுக்கு திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்று தகவல் தற்போழுது வெளியாகியுள்ளது.

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஓய்வு எடுக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய் 3 ஆண்டுகளுக்கு திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் விஜய் தற்போழுது தனது 67வது படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போழுது காஷ்மீரில் மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து நா ரெடி பாடல் வெளியாகி செம ஹிட் அடித்தது.

அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளிவரும் நிலையில், விஜய் இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் எனவும் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

சினிமா ரசிகர்களை மிரட்டிய 5 ஜெயில் படங்கள்! ஒரு பார்வை!

இந்நிலையில் இந்த படத்தில் படப்பிடிப்பு முடித்ததும் விஜய் அவர்கள் 3 ஆண்டுகள் ஓய்வு எடுக்கிறார் என கூறப்படுகிறது. இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வேறு எந்த படங்களிலும் நடிக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews