மோகனுக்காக 75 படங்களில் குரல் கொடுத்த விஜய்யின் மாமா.. ஆனாலும் மோகனுக்கு அவர் பிடிக்காமல் போக காரணம்..

தமிழ் சினிமாவில் பாடகர், நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.என். சுரேந்தர்.

இவர் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரனின் சகோதரர் ஆவார். சிறு வயதிலேயே பாடகராக மாறிய சுரேந்தர், ஏராளமான படங்களில் பாடவும் செய்துள்ளார். அதுமட்டுமின்றி எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் ஹீரோவாக அறிமுகமான ’நாளைய தீர்ப்பு’ என்ற திரைப்படத்தில் சுரேந்தர் நடித்துள்ளார். இதனை அடுத்து பிரியமுடன், நெஞ்சினிலே உள்பட சில எஸ்ஏ சந்திரசேகர் படங்களிலும், சென்னை 600028 உள்பட ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

எஸ் என் சுரேந்தர் சுமார் 600 படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணிபுரிந்துள்ளார். நெஞ்சை கிள்ளாதே என்ற திரைப்படத்தில் பிரதாப் போத்தனுக்கு டப்பிங் செய்ய ஆரம்பித்தவர் அதன்பிறகு ஏராளமான படங்களுக்கு டப்பிங் செய்துள்ளார்.

sn surendar

மோகன் நடித்த கிளிஞ்சல்கள் என்ற திரைப்படத்தில் தான் அவருக்காக முதல் முதலில் டப்பிங் செய்தார் சுரேந்தர். இதனை அடுத்து மோகன் நடிக்கும் படங்கள் அனைத்துமே இவர்தான் டப்பிங் செய்தார். ஏறக்குறைய 75 படங்களில் மோகனுக்காக மட்டும் அவர் டப்பிங் செய்துள்ளார் என்பது சிறப்பம்சமான விஷயமாகும்.

ஆனாலும் மோகனை அவர் நேருக்கு நேர் சந்தித்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்றும் பொது விழாவில் சந்தித்தால் கூட இருவரும் சிறு புன்னகை மட்டுமே புரிவார்கள் என்றும் கூறப்படுவது உண்டு. மோகனுக்காக டப்பிங் செய்வது நான்தான் என சுரேந்தர் பொதுவெளியில் கூறியது மோகனுக்கு கோபம் என்றும் அதனால் தான் சுரேந்தரை அவர் கண்டு கொள்வதில்லை என்றும் கூறப்பட்டது.

டப்பிங் கலைஞராக மட்டுமின்றி ஏராளமான பாடல்களையும் இவர் பாடியுள்ளார். 1966 ஆம் ஆண்டு முதல் இவர் ஏராளமான பாடல்களை பாடி வரும் நிலையில், அவரது கலை சேவையை பாராட்டி தமிழக அரசு அவருக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியது. அதேபோல் சிறந்த டப்பிங் கலைஞர் என்ற விருதும் கடந்த 2005 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews