பாஜக தனித்து போட்டியிட தயாரா? ஒருமுறை கூட தனித்து போட்டியிடாத திமுக சவால்?

தமிழகத்தில் திமுக என்ற கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுவரை தனித்து போட்டியிடாத நிலையில் பாஜகவை பார்த்து தனித்துப் போட்டியிட தயாரா என கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டியில் குஜராத் மாநிலத் தேர்தலை வைத்து பாராளுமன்ற தேர்தலின் முடிவை தீர்மானிக்க முடியாது என்றும் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றாலும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது என்றும் நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு நிலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவை முதன்மை எதிர்கட்சியான திமுக பார்க்கவில்லை என்றும் 2001ஆம் ஆண்டு 2021 ஆம் ஆண்டு அதிமுகவில் சவாரி செய்து தான் அந்த கட்சி எம்எல்ஏக்கள் பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக தனித்து நின்றால் அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றும் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருவது போன்ற ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் திமுக இதுவரை சட்டமன்ற தேர்தல் ஆகட்டும் பாராளுமன்ற தேர்தல் ஆகட்டும் ஒருமுறைகூட தனித்து நிற்காத நிலையில் பாஜகவை தனித்து நிற்கத் தயாரா என கேள்வி எழுப்பி இருப்பது நகைப்புக்குரியதாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews