சிவாஜி வீட்டில் திடீரென தரையில் அமர்ந்த இயக்குநர்.. ரசிகனாக மாறி கதை சொல்லி கவர்ந்த டெக்னிக்..

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தமிழ்த்திரையுலகின் ஓர் ஆளுமை என்றே கூறலாம். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்னும் அளவிற்கு சினிமா துறையில் முன்னோடியானவர். கிட்டத்தட்ட நான்கு தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழ் சினிமாவில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய நடிகர் திலகம் 1980 -கள் வரை பிஸியான நடிகராக இருந்தார்.

அதன்பின் ரஜினி, கமல் என அடுத்த தலைமுறை வரவே தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எந்தத் தலைமுறைக்கும் நான் சளைத்தவனல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்த படங்கள் தான் முதல் மரியாதை, தேவர் மகன், ஒன்ஸ்மோர், படையப்பா, என் ஆசை ராசாவே போன்ற படங்கள். ரஜினி, கமல், விஜய், முரளி போன்ற நடிகர்களுக்கு அப்பாவாகவும் நடித்து தனது கம்பீரம் குறையாமல் இறுதி மூச்சு வர நடித்தவர். அவர் நடித்த கடைசித் திரைப்படம் தான் பூப்பறிக்க வருகிறோம்.

1999-ல் வெளியான இந்தத் திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் தற்போதை முன்னனி நடிகரான விஷாலின் அண்ணன் அஜய் ஆவார். இந்தப் படத்தினை இயக்கியவர் இயக்குநர் ஏ.வெங்கடேஷ்.

ஆக்சன் படங்களையும், கமர்ஷியல் படங்களையும் இயக்கிவரும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இந்தப் படத்திற்கான கதையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என எண்ணி அவரை அணுகியிருக்கிறார்.

பராசக்திக்கு முன்பாக சிவாஜியை ஹீரோவாக்கிய நடிகை.. நடிகர் திலகத்தின் திறமையை உணர்த்திய ‘சிவாஜி‘ நாடகம்

அப்போது சிவாஜிக்குத் தெரிந்த தன் நண்பருடன் சிவாஜியின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ். அவரது நண்பர் ஏ.வெங்கடேஷை சிவாஜி கணேசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். ஒரு மாபெரும் நடிகருக்கு கதை சொல்ல வந்திருக்கும் அந்த தருணத்தினை நினைத்து உள்ளுக்குள்ள பூரித்திருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இயக்குநரிடம், எனக்கு ஏதோ கதை வைச்சிருக்கீங்களாமே.. என்ன சொல்லுங்கள் என்று சிவாஜி கேட்க, அந்த இடத்தில் ஒரு ரசிகனாய்  திடீரென தரையில் அமர்ந்திருக்கிறார் ஏ.வெங்கடேஷ்.

உடனே சிவாஜி கணேசன், “ஏன் தரையில் உட்கார்ந்திருக்கீங்க.. சிவாஜி இயக்குநரை தரையில் உட்கார வைத்துக் கதை கேட்டார் என்று மீடியாக்கள் எழுதவோ.. வேண்டாம் எழுந்து ஷோபாவில் அமருங்கள் என்றிருக்கிறார். ஆனால் இயக்குநர் வெங்கடேஷ், “ இல்லப்பா.. உங்கள் படங்களை எங்க ஊரு தியேட்டர்ல சேரில் உட்கார்ந்து மேல்நோக்கி உங்களைப் விசிலடிச்சு பார்த்து ரசித்தவன் நான். இப்போது உங்களுக்குக் சரிசமமாக உட்கார்ந்து என்னால் கதை சொல்ல முடியாது எனவே நான் தரையில் அமர்ந்து உங்களை மேல்நோக்கி பார்த்தே கதை சொல்கிறேன். என்று கூறியிருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டு கதை கேட்டு பின் ‘பூப்பறிக்க வருகிறோம்‘ என்ற அந்தப் படத்தில் நடித்தார். இதுவே அவரின் கடைசிப் படமாக அமைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews