பராசக்திக்கு முன்பாக சிவாஜியை ஹீரோவாக்கிய நடிகை.. நடிகர் திலகத்தின் திறமையை உணர்த்திய சிவாஜி நாடகம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல்படம் ‘பராசக்தி‘ என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ‘பராசக்தி‘  படத்திற்கு முன்பாகவே நடிகர் திலகத்தின் திறமையைப் பார்த்து அவரை தனது படத்தில் முதன் முதலாக ஹீரோவாக புக் செய்தவர் நடிகை அஞ்சலி தேவி.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் மேடை நாடகங்களில் நடித்து கொண்டிருந்தார்.  இவருக்கு நடிகர் ஆவதற்கான விதை விழுந்தது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்‘ நாடகம் தான். சிறுவயதில் தன் தந்தையுடன் கோவில் திருவிழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பார்த்தவருக்கு தானும் நடிகராக வேண்டும் என்ற விதை எட்டு வயதிலேயே அவர் மனதில் விழுந்திருக்கிறது.

அதன்பின் நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து பல புராணக் கதைகளில் நடிக்க ஆரம்பித்தார். பெண் வேடங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் திராவிடர் கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா எழுதிய  சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற நாடகத்தில் சிவாஜியாக நடித்தார்.

அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட 90 பக்க வசனத்தை மனப்பாடம் செய்து மேடையில் சிவாஜியாக நடித்து அங்கிருந்தவர்களை மிரள வைத்தார். அப்போது அவருக்கு வயது 18. இந்த நாடகத்தில் அவரின் நடிப்பினை பார்த்து தந்தை பெரியார் அவருக்கு கணேசன் என்ற இயற்பெயரை சிவாஜி கணேசன் என அடைமொழி கொடுத்து மாற்றினார்.

ஒவ்வொரு வார இறுதியிலும் இதைத் தவறாமல் செய்த கேப்டன் விஜயகாந்த் டீம்.. அரசியலுக்கு அடித்தளம் போட்ட 20 ஆண்டு வரலாறு..

இந்த நாடகத்தின் வெற்றியால் அப்போதுள்ள  சினிமா தயாரிப்பாளர்களின் கவனம் சிவாஜியின் பக்கம் திரும்பியது. அப்போது சக்தி நாடக சபா சார்பில் இயற்றப்பட்ட மேடை நாடகமான நூர்ஜகானில் சிவாஜி கணேசன் நூர்ஜகானாக நடித்தது வேலூர் நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் அவர்களைக் கவர்ந்தது. தொடர்ந்து இவரின் திறமையை நடிகை அஞ்சலி தேவியும் அறிந்தார்.

அப்போது சிவாஜியை நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் தான் தயாரித்த ‘பராசக்தி‘ படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் போட்டார். ஆனால் அதற்கு முன்பாகவே நடிகை அஞ்சலி தேவி தனது ‘பரதேசி‘ படத்தில் முதன் முதலாக சிவாஜி கணேசனை ஹீரோவாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தார். ஆனால் ‘பரதேசி‘ படம் வெளியாகும் முன்பே ‘பராசக்தி‘ படம் வெளியாகி தனது முதல் வசனமான சக்சஸ் என்ற வார்த்தையை திரையில் பயன்படுத்தி பின்னர் சினிமா உலகையை ஆண்டார் சிவாஜி கணேசன். அஞ்சலி தேவி தயாரித்த படம் தமிழில் ‘பூங்கோதை‘ என்றும் தெலுங்கில் ‘பரதேசி‘ என்றும் தயாராகி வெளிவந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...