அருணாச்சலம் படத்துக்கு முதல்ல வைச்ச டைட்டில் என்ன தெரியுமா? சுந்தர்.சி ஓபன் டாக்

ஒரே ஒரு படத்தால் மனிதர்களின் ஒட்டுமொத்த டென்ஷனையும் தூக்கி எறிந்து தியேட்டரில் இரண்டரை மணி நேரம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தவர் சிரிப்பு டாக்டர் இயக்குநரான சுந்தர் சி. தமிழில் ஏற்கனேவே சுந்தர் கே.விஜயன், முக்தா சுந்தர் என இயக்குனர்கள் இருந்ததால் வினாயக சுந்தரவேல் என்ற பெயர் சுந்தர் சி. ஆக மாறியது.

தனது குருவான மணிவண்ணனிடம் இருந்து தனியே வந்து தனது முதல்படத்தை எடுக்கத் தயாரானார் சுந்தர் சி. அப்படம் தான் முறை மாப்பிள்ளை. அருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம். முறை மாப்பிள்ளை ஷூட்டிங்கில் தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனுடன் ஏற்பட்ட வேறுபாடால் வெளியேறினார் சுந்தர்.சி. பின் மீதிப் பட வேலைகளை மைனா, கும்கி படங்களை எடுத்த பிரபு சாலமன் தான் பார்த்தார்.

சுந்தர்.சியே எதிர்பார்க்காத ஒரு விஷயம் அவர் வாழ்வில் மனைவி குஷ்புவால் நிகழ்ந்தது. அது தான் ‘அருணாச்சலம்’. சூப்பர் ஸ்டாரோடு இணைந்தது. ஆனால் ரஜினியின் அப்போதையா மாஸும், சுந்தர்.சியின் தரலோக்கல் காமெடியும் சரியாக சேராமல் படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இருந்தபோதிலும் இந்தப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன தெரியுமா? குபேரன் என்பது தான். ஆனால் டைட்டில் லீக் ஆகியதால் வேறு டைட்டிலை யோசித்து கொண்டிருந்தார்கள். பேட்டி ஒன்றில் இதுபற்றி கூறிய இயக்குநர் சுந்தர்.சி.

உலகம் சுற்றும் வாலிபனுக்கு செக் வைத்த கலைஞர்.. கைகொடுத்து தூக்கிவிட்ட நடிகர் திலகம்.

“ரஜினி படங்கள் என்றாலே டைட்டிலுக்குத்தான் முதலில் மாஸ் கிடைக்கும். டைட்டிலை வைத்தே படத்தை வெற்றியாக்கி விடுவார்கள். அந்தவகையில் அருணாச்சலம் படத்திற்கு முதலில் நாங்கள் தேர்வு செய்தது குபேரன் என்ற தலைப்புதான். ஆனால் அந்த டைட்டில் லீக் ஆகியது என்பதால் மற்றொரு டைட்டிலை யோசித்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒருநாள் ரஜினி சார் என்னை அழைத்து சுந்தர் சூப்பர் டைட்டிலை பிடிச்சிட்டோம் உடனே வாங்க என்றார்.

நானும் சென்ற போது அங்கே ரஜினியின் நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவரிடம் கேட்ட போது ‘அருணாச்சலம்‘ என்றார். எனக்கு திருப்தியே இல்லை. பிறகு அவரிடம் என்ன சார் டைட்டில் ரொம் சாஃப்டா இருக்கு.. அருணாச்சலம், வேதாச்சலம்ன்னு சொல்லிக்கிட்டு என்று நான் கூற, உடனே ரஜினி சார் எங்களை அழைத்து டைட்டிலை அவரது பாணியில் ‘அருணாச்சலம்‘ என்று கம்பீரமாக உரக்கக் கூறினார்.

அப்போதுதான் அந்த டைட்டிலின் மீது நம்பிக்கை வந்தது. பிறகு அதையே வைத்து விட்டோம்.“ என்று சுந்தர்.சி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...