உலகம் சுற்றும் வாலிபனுக்கு செக் வைத்த கலைஞர்.. கைகொடுத்து தூக்கிவிட்ட நடிகர் திலகம்.

இப்போது படங்களில் அரசினை விமர்சித்து ஒரு டயலாக் பேசினாலே உடனே அந்தப் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி அந்தப் படத்தை தியேட்டரில் இருந்தே தூக்கி விடுகின்றனர். அல்லது அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கி விடுகின்றனர். இது இப்போது மட்டுமல்ல அந்தக் காலத்திலிருந்தே இருக்கிறது. எம்.ஜி.ஆர் படங்களில் கலைஞரை விமர்சிப்பதும், கலைஞர் தனது கதை வசனம் உள்ள படங்களில் எம்.ஜி.ஆரை விமர்சிப்பதுமாக இருந்து வந்தது.

இதேபோன்ற ஒரு சம்பவம் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கும் வந்துள்ளது. எம்.ஜி.ஆரின் திரை வரலாற்றிலேயே அதிக வசூல் செய்து திரையிட்ட இடங்களிலெல்லாம் வெள்ளி விழா கொண்டாடிய படம் உலகம் சுற்றும் வாலிபன். எம்.ஜி.ஆரே சொந்தமாகத் தயாரித்து, இயக்கிய படம். இதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அப்போது தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த திமுக அரசு இப்படத்தை வெளியிடுவதற்கு சில முட்டுக்கட்டைகளைப் போட்டது.

மேலும் சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது. ஆனாலும் துவளாத எம்.ஜி.ஆர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு படத்தினை வெளியிட்டு ஹிட் வரலாற்றில் இடம்பிடித்தார். இதற்கு பேருதவியாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

திரையில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும் நிஜத்தில் இவர்கள் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். மேலும் எம்.ஜி.ஆர் படங்கள், சிவாஜியின் படங்களின் பிரீமியர் ஷோ என்றால் இரு குடும்பத்தாரும் போய் பார்ப்பதும் வழக்கமாம். இப்படி இருவரும் நெருங்கிய உறவினர்கள் போலத்தான் இருந்து வந்தனர்.

இந்நிலையில் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக தியேட்டர்கள் கொடுக்கக் கூடாது என திமுக அரசு தியேட்டர் அதிபர்களை பயமுறுத்த எம்.ஜி.ஆர் மனதளவில் பெரிதும் வருத்தப்பட்டார். அப்போது சிவாஜி தாமாகவே முன்வந்து எம்ஜிஆரிடம் அண்ணே! யார் கொடுக்கலைனாலும் பரவாயில்லை, என் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள், நான் தருகிறேன் என்று கூறினாராம் சிவாஜி.

“இல்ல சிவாஜி. இப்படி செய்தால் பெரிய பிரச்சினையாகிவிடும்“ என்று எம்.ஜி.ஆர். கூறியுள்ளார். ஆனால், படம் வெளியாகும் போது அதன் பிரீமியர் ஷோவை சிவாஜி கணேசன் தியேட்டரில் தான் வெளியிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.