இயக்குநராக கிடைக்காத புகழ்.. கதாபாத்திரத்தால் புகழ்பெற்ற ‘மிஸ்டர் சந்திரமௌலியை‘ ஞாபகம் இருக்கிறதா?

நடிகர்கள் எத்தனையோ படங்களில் நடித்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு படமாவது அவர்களை என்றும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு அவரது கதாபாத்திரங்கள் அமைந்து விடும். ஒரு சில சீன்களில் தலைகாட்டி புகழ்பெற்றவர்களும் உண்டு. அப்படி ஒரு நடிகர் தான் இயக்குநர் சங்கரன்.

இயக்குநராக 1970-80 களில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு, தேன் சிந்துதே வானம், துர்காதேவி, ஒருவனுக்கு ஒருத்தி, பெருமைக்குரியவள், தூண்டில் மீன், வேலும் மயிலும் துணை, குமரிப் பெண்ணின் உள்ளத்திலே போன்ற படங்களை இயக்கியிருந்தாலும் அவரது படைப்புகள் பேசப்படவில்லை. இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட பல டைரக்டர்கள் ஆரம்ப காலத்தில் இவரிடம் தான் அசிஸ்டென்டாக பணியாற்றி உள்ளனர். இவர் இயக்கிய படங்கள் கொஞ்சம் தான் என்றாலும், நடித்த படங்கள் ஏராளம்.

1977 ல் பெருமைக்குரியவர்கள் என்ற படத்தை இயக்கி, அதன் மூலம் நடிகராகவும் அறிமுகமானார் சங்கரன். பிறகு புதுமைப் பெண், ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, மெளன ராகம், உனக்காகவே வாழ்கிறேன், மக்கள் என் பக்கம், நியாய தராசு, ஆடி வெள்ளி, பொண்டாட்டி தேவை, தாயம்மா, அமரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

மெகாஹிட் படங்களின் தயாரிப்பாளர்.. கோடீஸ்வரராக இருந்தும் எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கும் சீக்ரெட்

தமிழ் சினிமாவிற்கு டைரக்டர் சங்கரனை தெரியாமல் இருக்கலாம். ஆனால் நடிகர் சங்கரனை யாராலும் மறக்க முடியாது. அப்பாவியான, சாந்தமான, தெய்வீக தன்மையுடன் இருக்கும் அவரது முகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. எத்தனையோ படங்களில் அப்பா வேடத்தில், தாத்தா வேடத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்தவர்தான் இயக்குநர் சங்கரன்.

குறிப்பாக மணிரத்னத்தின் மெளன ராகம் படத்தில் நடிகர் கார்த்திக்கால் “மிஸ்டர் சந்திரமெளலி” என கூப்பிடப்பட்டு மிகப் பிரபலமானவர். அந்தப் படத்தில் ரேவதியின் அப்பா கேரக்டரில் நடித்தவர் தான் சங்கரன். இந்த டயலாக் மட்டுமல்ல டைரக்டர் சங்கரனும் பிரபலம் தான். பல படங்களில் நீதிபதியாக, ஹீரோயினின் தந்தையாக நடித்து, தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் சங்கரன்.

கேப்டன் விஜயகாந்தின் சின்னக் கவுண்டர் படத்தில் இவர் நீதிபதியாக சிறிய கதாபாத்திரத்தில் படத்தின் முதல் காட்சியிலேயே வருவார். ஆனால் இன்று வரை அந்த கேரக்டரும் நினைவு கூறப்படுகிறது. அந்த அளவுக்கு தனது கேரக்டராகவே மாறி விடுபவர் சங்கரன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.