மிரட்டும் தங்கலான் டீசர் : பிதாமகன், ராவணன், ஐ படத்தை எல்லாம் பின்னால் தள்ளிய சீயான் விக்ரம்

ஒரு நடிகர் என்பவர் டைரக்டர் சொல்லிக் கொடுப்பதை உள்வாங்கி தனது பாணியில் நடிக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு கேரக்டரைக் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமே தோற்றுப் போகும் அளவிற்கு நடிப்பில் மிரள வைப்பவர்கள் அந்தக் காலத்தில் நடிகர் திலகம், இடைக்காலங்களில் உலக நாயகன், இன்று சீயான் விக்ரம்.

சீயான் விக்ரமின் அப்படிப்பட்ட ஒரு நடிப்புதான் தற்போது  அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. தமிழில் முன்னணி ஸ்டாராக இருக்கும் விக்ரம் இந்த இடத்தைப் பிடிப்பதற்கு அவரது உழைப்பு என்பது கொஞ்சம் நஞ்சமில்லை. நடிக்க வந்த ஆரம்ப காலகட்டங்களில் இவரது படம் சரியாக போகவில்லை.

பாலா இயக்கத்தில் உருவான சேது, விக்ரமை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அதன்பின் தொடர்ந்து தில், தூள், ஜெமினி என கமர்ஷியல் ஹிட் கொடுக்க மீண்டும் பாலா பிதாமகனில் நடிக்க வைத்து தேசிய விருது வரை கொண்டு சேர்த்தார். இதன்பின் நடிப்பு என்றால் சிவாஜி, கமலுக்குப் பிறகு அது விக்ரம் தான் என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது.

வெளியான தங்கலான் டீசர் : பாம்பை இரண்டாகப் பிளந்து மிரள வைத்த சீயான் விக்ரம்

தற்போது அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் தங்கலான் டீசர் வெளியாகி சோஷியல் மீடியாக்களில் விக்ரமின் தோற்றமும் நடிப்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இதுகுறித்து சீயான் விக்ரம் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ’‘இதுவரை நான் நடித்த படங்களில் கஷ்டப்பட்டு நடித்த படங்கள் என்றால் பிதாமகன், ஐ, இராவணன் போன்ற படங்களைச் சொல்லலாம். ஆனால் தங்கலான் படத்துடன் ஒப்பிடும் போது 3 சதவீதம் கூட கிடையாது“ என்று கூறியிருக்கிறார்.

உண்மைதான் தங்கலான் டீசரைப் பார்த்தாலே விக்ரமின் அபார உழைப்பு தெரியும். பாலா, மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்களைப் போலவே பா. ரஞ்சித்-ம் விக்ரமின் திறமையைக் கண்டு அதை சரியான விதத்தில் பயன்படுத்தி இருக்கிறார். தங்கலான் படம் தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் என்று சினிமா விமர்சகர்கள் இப்போதே ஆருடம் கூறி வருகின்றனர்.

Malavika

“எல்லாத்துக்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்” சிவகார்த்திகேயன் பற்றிய கேள்விக்கு பதிலடி கொடுத்த இமான்

இதுமட்டுமல்லாது இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகன் ஏற்கனவே தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் காலேஜ் புரபஸராக வந்து கலக்கியிருப்பார். தற்போது அவருடைய தோற்றமும் வித்தியாசமாக உள்ளதால் ரசிகர்கள் படத்தை திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews