நடிப்புக்கு குட் பை சொல்லப் போகிறாரா அதிதி ஷங்கர்? : வெளியான வைரல் புகைப்படம்

சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் தான் அடுத்த தலைமுறை ஹீரோ, ஹீரோயினாக வர வேண்டுமா? இயக்குநர்களின் வாரிசுகள் யாரும் இல்லையே என்ற குறையைப் போக்கிய வெகுசில நாயகிகளில் ஒருவர் அதிதி ஷங்கர். இதற்குமுன் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுடன் மாநாடு படத்தில் ஜோடியாக நடித்தார்.

தற்போது இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கரும் ஹீரோயின் அரிதாரம் பூசி நடித்துக் கொண்டிருக்கிறார். முதல்படமே அவருக்கு கார்த்தியுடன் ஜோடி. முத்தையா இயக்கிய விருமன் படத்தில் தாவணி சேலையுடன், கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். கதாநாயகி மட்டுமன்றி இதில் யுவனின் இசையில் மதுரை வீரன் அழகுல என்ற பாடலையும் பாடினார்.

அதன் பின் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்தார். இதிலும் நடுத்தர வர்க்கத்து சென்னைப் பெண்ணாக வந்து மனம்கவர்ந்தார். இப்படத்திலும் வண்ணாரப் பேட்டையில என்ற பாடலைப் பாடினார். இவ்விரு படங்களும் சுமாரான வெற்றியைப் பெற்ற நிலையில் அடுத்து விளம்பரப் படங்களில் தோன்றி நடித்தார்.

கொளுத்திப் போட்ட லெஜன்ட் சரவணன் : விஜய், ரஜினியை வம்புக்கு இழுத்து விட்ட பேச்சு

தற்போது அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாக்டர் உடையுடன் போஸ் கொடுத்து அதில் Dr.A என்றும் பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் அதிதி ஷங்கர் நடிப்புக்கு குட்பை சொல்லப் போகிறரா அல்லது ஏதேனும் பட ஷுட்டிங்கா என்று குழம்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் அதிதி ஷங்கர் ஏற்கனவே டாக்டருக்குப் படித்தவர்.

தனது தந்தை ஷங்கர் வேண்டாம் என்று சொல்லி வற்புறுத்தியும் பிடிவாதமாக நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்து தற்போது நடித்து வருகிறார். இதனால் ஷங்கர் கடுங்கோபம் கொண்டு உன் ஆசைப்படி இரண்டு, மூன்று படங்களில் மட்டும் நடித்து விட்டு டாக்டராக சேவை செய் என்ற கண்டிஷன் போட்டாராம்.

இதை ஒப்புக் கொண்ட அதிதி ஷங்கர் தற்போது சில படங்களில் நடித்து விட்டு டாக்டர் தொழிலை மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வந்தது. இதனை நிரூபிக்கும் வகையில் தற்போது அதிதியும் டாக்டர் உடையுடன் புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பதால் நடிப்புக்கு என்ட் கார்டு போட்டு விட்டாரோ என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...