எம்ஜிஆரையே கலாய்த்த இயக்குனர்… அதற்கு புரட்சித்தலைவர் செய்தது தான் ஹைலைட்..!

ஒரு இயக்குனர் அதுவும் மாணவப்பருவத்திலேயே தமிழ் சினிமாவில் வரும் சில லாஜிக் இல்லாத காட்சிகளை டார் டாராகக் கிழித்துத் தொங்க விட்டுள்ளார். அதிலும் புரட்சித்தலைவரையே கலாய்த்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? அது யார்? அதற்கு எம்ஜிஆரோட ரியாக்ஷன் என்னன்னு வாங்க பார்க்கலாம்.

ரஜினிக்கு வெறும் ஸ்டைல் தான் வரும். நடிப்பு வராது என்று சொல்பவர்களுக்காகவே சில படங்களில் ரஜினி மிகச்சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார். முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களைச் சொல்லலாம்.

ரஜினியைப் பொறுத்தவரை அவர் திரைப்படக்; கல்லூரியில் படித்தவர். அதனால் அவருக்கு உலகின் மிகச்சிறந்த படங்கள் எல்லாம் காட்டப்பட்டு இருக்கும். ஒவ்வொரு திரைப்படக் கல்லூரி மாணவருக்குமே தமிழ்ப்படத்தை உலகமே வியக்கும் அளவுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது ரஜினிக்கும் இருக்கிறது. இயக்குனர் மகேந்திரன் அதற்கு ஒரு காரணமாக இருந்து இருக்கிறார்.

Mullum malarum
Mullum malarum

முள்ளும் மலரும் படத்தை இயக்கியவர் அவர் தான். தனது கல்லூரி நாட்களில் தமிழ் சினிமாவில் இடம்பெறும் சில அபத்தமான காட்சிகளைப் பார்த்து அவர் எள்ளி நகையாடுவாராம். அப்படி அவருக்கு திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போல ஒரு வாய்ப்பு கல்லூரி பேச்சுப்போட்டியில் கிடைத்தது. அப்போது அவர் தமிழ் சினிமாவின் அபத்தங்களை நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டுக் கொண்டு இருந்தார். மாணவர்கள் உற்சாகமாகக் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

அப்போது மேடையில் சிறப்பு விருந்தினராக அமர்ந்து இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மகேந்திரனின் பேச்சில் எம்ஜிஆர் மீதான மறைமுக தாக்குதலும் இருந்ததாம். அதனால் கல்லூரி நிர்வாகிகளே என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு இருந்தார்களாம். ஆனால் எம்ஜிஆரோ இன்னும் நல்லா பேசு. நிறுத்திடாதே என மகேந்திரனை நோக்கி சைகை காட்டினாராம்.

அதே நேரம் மகேந்திரன் தனக்குக் கொடுக்கப்பட்டு இருந்த நேரத்தையும் தாண்டி அருமையாகப் பேசி முடித்தாராம். எம்ஜிஆர் அவரை மனமுவந்து பாராட்டினார். அதன்பின்னர் ஒரு சமயம் சென்னையில் தங்குவதற்கு இடம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தாராம் மகேந்திரன்.

இதை அறிந்த எம்ஜிஆர் அவரை தன் ஆபீசிலேயே தங்க வைத்தாராம். தொடர்ந்து அவரை பொன்னியின் செல்வன் நாவலுக்கு திரைக்கதையும் எழுத வைத்தாராம். ஆனால் அந்தத் திட்டமோ கடைசி வரையிலும் நிறைவேறாமல் போனது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews