லிங்குசாமி இயக்கத்தில் தயாராகப்போகும் பையா2!… ஹீரோ யாருனு தெரியுமா?… சத்தியமா கார்த்தி இல்லைங்கோ….

லிங்குசாமி தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒருவர். இவர் ஆனந்தம் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானார். பின் ரன், சண்டக்கோழி போன்ற திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்தாலும் இவருக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்த திரைப்படம் என்றால் அது அஜித் நடிப்பில் வெளியான ஜி திரைப்படம்தான். இப்படம் வெளியான பின் இவர் பல எதிர்மறை விமர்சனங்களையே பெற்றார்.

விக்னேஷ்சிவன் கதையில் நடிக்கபோகும் அந்த இயக்குனர்… இது என்னடா பிரதீப்புக்கு வந்த சோதனை…

இதனால் விரக்தியில் இருந்த லிங்குசாமி உடனே இயக்கிய திரைப்படம்தான் சண்டகோழி. இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு பின்தான் இவர் ஓரளவு மனநிறைவுடன் இருந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதன் பின் இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் பையா. இப்படம் இவருக்கு ப்ரிய அளவில் கை கொடுக்கவில்லை. இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

லோகேஷ் கனகராஜை தாக்கி பேசினாரா கோபி நயினார்?.. வைரலாகும் பேட்டி.. எல்லாமே அந்த ஆதங்கம் தான்!

இப்படம் தோல்வி படமாக அமைந்தாலும் கூட இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்றுதான் கூறவேண்டும். இதன்பின் இவர் இயக்கிய திரைப்படங்களான அஞ்சான், சண்டகோழி2 போன்ற திரைப்படங்களும் இவருக்கு சறுக்கலைதான் தந்தது.

ஆனால் தற்போது இவரது படமான பையா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தில் இளம் நடிகரான அதர்வாவின் தம்பியான ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இப்படத்தில் முதலில் ஆர்யா, கார்த்தி போன்ற நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டாராம். ஆனால் அவர்கள் யாரும் அதற்கு சம்மதிக்கவில்லையாம். இந்நிலையில் தற்போது ஆகாஷை வைத்து படத்தினை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படமானது இவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அய்யய்யோ..! என்னது! அப்பாவ வைச்சு Direction-ஆ? ஷாக்கான நடிகை ஸ்ருதிஹாசன்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...