லோகேஷ் கனகராஜை தாக்கி பேசினாரா கோபி நயினார்?.. வைரலாகும் பேட்டி.. எல்லாமே அந்த ஆதங்கம் தான்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அறம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கோபி நயினார். சமீபத்தில், அளித்த பேட்டியில் பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் இயக்குனர்கள் நல்ல கதைகளை தேர்வு செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இப்பொழுது வருகிற படங்களில் எல்லாம் நடிகைகளை பொம்மை போன்று நடிக்க வைத்து வரும் நிலையில் நடிகைகளை மையமாக கொண்டும் படத்தை ஹிட் கொடுக்கலாம் என்று நிருபித்திருந்தார் கோபி நயினார்.

கோபி நயினார் பேட்டி

கதாநாயகியாக தனித்து நடித்த நயந்தாராவுக்கு பெரும் வரவேற்ப்பை பெற்று கொடுத்தது அறம் படம். இந்த படத்திற்கு பின் நயன்தாராவின் மார்க்கெட் வேல்யூ மேலும் உயர்ந்தது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் ஜெய்யை வைத்து கருப்பர் நகரம் என்று வடச்சென்னையை மையமாக வைத்து எடுத்த படத்தை துவங்கி பாதிலேயே நிறுத்தபட்டிருந்தது. அப்படத்திற்கு இலங்கையில் ஒரு பெண்ணிடம் முதலீடு வாங்கியதாகவும் அதில் 25 சதவீதம் லாபத்தை தருவதாகவும் கூறி படத்தை பாதியில் நிறுத்தியதால் அந்த பெண் கோபி நாயினர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் கத்தி. விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் வாழ்க்கயில் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அந்தப் படம் அமைந்து. ஆனால் அந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி கோபி நயினார் பரபரப்பை எர்ப்படுத்தியிருந்தார்.

மோசமான இயக்குனர்

இந்நிலையில் கோபி நயினார் தனியார் வார இதழ் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், “இப்போதெல்லாம் நடிகர்களை வைத்துதான் கதையை கூறுகிறார்கள். யாரை வளர விட வேண்டும், யாரை வளர விடக்கூடாது என்பதையும் அந்த நடிகர்கள்தான் முடிவு செய்கிறார்கள். நல்ல கதை வைத்திருக்கிறவன் நூறாவது இடத்திலும், மோசமான கதையை வைத்திருக்கிறவன் முதல் இடத்திலும் இருக்கிறான் என்று கூறியுள்ளார்.

ஒரு மோசமான ஹீரோ யாரை இயக்குனராக்க வேண்டும் யாருடைய கதை படமாக எடுக்கப்பட வேண்டும் அதை யார் தயாரிக்க வேண்டும் என்கிற வரைக்கும் முடிவு செய்கிறான். சினிமா எப்படி அழிந்து போயிருக்கு பாருங்க” என்று தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

இவர் பேசியதை பார்த்த பலரும் தற்போது கோலிவுட்டின் இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ்தான் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு விஜய் தொடர்ந்து வாய்ப்புகளை அளித்து வருகிறார். இந்நிலையில் அந்த மோசமான கதை வைத்திருக்கும் இயக்குனர் என்று லோகேஷ் கனகராஜையும், மோசமான ஹீரோ என்று விஜய்யையும் கோபி நயினார் சொல்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோபி நயினார் லோகேஷ் கனகராஜை குறிப்பிட்டு கூறினாலும் தவறாக இருக்காது. ஏனென்றால் அவர் மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்கள் தான் கதைப்படி இயக்கினார். அடுத்து அவர் இயக்கிய எந்தப் படத்திலும் நல்ல கதை இல்லை என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews