பாலு மகேந்திராவிடம் வேலை செஞ்ச போதே பாலா சந்திச்ச அவமானங்கள்.. அதையும் தாண்டி சினிமாவில் ஜெயிக்க இதுதான் காரணம்!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. பாலு மகேந்திராவிடம் அசிஸ்டன்ட்டாக இருந்த அவர் பின்னர் ‘சேது’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். பல ஆண்டுகளாக தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தமிழ் சினிமாவில் பல முயற்சிகளை செய்து வந்த விக்ரமுக்கு சேது திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

மிகவும் சோகமான ஒரு க்ளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் இருந்ததால் அந்த சமயத்தில் படம் பெரிதாக போகவில்லை. ஆனால் கொஞ்ச நாள் கழித்து மெல்ல மெல்ல படத்திற்கான வரவேற்பும் அதிகரிக்க விக்ரம் மற்றும் பாலா ஆகிய இருவரின் திரை பயணத்திலும் மிக முக்கியமான படமாக சேது அமைந்திருந்தது. இதனையடுத்து சூர்யாவை வைத்து நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கி இருந்தார். இதில் பிதாமகன் படத்தில் விக்ரம், லைலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மேலும் நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலா, அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து ‘வணங்கான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் முதலில் சூர்யா நடித்து வந்து பின்னர் சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறி அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமானார்.

அதிக ரணங்களும், வேதனைகளும் நிறைந்த கதைக் களத்தை எடுத்து பேசும் பாலாவின் திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தடங்கள். அதே போல பிதாமகன், நந்தா, அவன் இவன் உள்ளிட்ட படங்களில் பாலா இயக்கிய காமெடி காட்சிகளும் சிறப்பானதாக இருக்கும். சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கிய பாலா, பிசாசு, சண்டிவீரன் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.

பொதுவாக தமிழ் திரைப்படங்களில் ஹீரோ என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என இருந்த வரையறை ஒன்றை மொத்தமாக மாற்றியமைத்த பாலா, தனது நடிகர்களுக்கு வித்தியாசமான லுக்கை கொடுத்து அதற்கும் ஒரு பெயரை ஏற்படுத்திக் கொண்டார். இதனிடையே, பாலு மகேந்திராவிடம் அசிஸ்டண்டாக பாலா இருந்த போது சில அவமானங்களையும் சந்தித்துள்ளார்.

பாலு மகேந்திரா திரைப்படங்களில் புரொடக்ஷன் அசிஸ்டன்ட்டாக இருந்து வந்த பாலா, பின்னர் அவரிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக மாறி இருந்தார். அப்போது பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவாகி இருந்த வீடு திரைப்படத்தில் பாலா பணிபுரிந்து வந்தார். ஆனால், இந்த விஷயம் பாலு மகேந்திராவுக்கே தெரியாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், சக இயக்குனர்கள் குழுவில் இருந்த சிலரிடம் இருந்தும் நிறைய அவமானங்களை சந்திக்க இதனால் பாலாவும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. ஆனால் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இப்படி பல கஷ்டங்களை கடந்து வந்த பாலா, பின்னர் சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் பிம்பத்தையே மாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...