பெண்களே ஹேர் கட் செய்து கொள்ள விருப்பமா? உங்களின் முக அமைப்பிற்கு எந்த ஹேர் கட் பொருந்தும்???

அனைவருக்கும் அவ்வபோது தங்களின் தோற்றத்தில் சில புதிய மாறுபாடுகளை செய்து கொள்ளுதல் மிகவும் பிடிக்கும். ஒரே மாதிரியாக தோற்றம் அளிப்பதை சலிப்பு தட்டுவதாக நினைப்பார்கள். எனவே புதிய சிகை அலங்காரம், புதுவிதமான மேக்கப், உடைகளில் மாற்றம் என்று தங்களின் தோற்றத்தை மாற்றிப் பார்க்க விரும்புவார்கள்.  ஒருவரின் தோற்றத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினால் அவரின் சிகை அலங்காரத்தில் சில மாறுபாடுகள் செய்தாலே போதும்.

hair cut 1

வித்தியாசமான ஹேர் கட் அவர்களின் தோற்றத்தையே மாற்றி விடும். பலருக்கும் ஹேர் கட் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் எந்த மாதிரியான ஹேர் கட் தங்களுக்கு பொருந்தும் என்பதை தேர்வு செய்வதில் குழம்பிவிடுகிறார்கள். சிலர் சில பிரபலங்களின் ஹேர் கட்டை செய்து பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் அது தங்களின் முக அமைப்பிற்கு பொருந்துமா என்பதை யோசிக்க தவறிவிடுகிறார்கள். தவறான ஹேர் கட்டை தேர்ந்தெடுத்து விட்டு பின்னால் வருந்துவதை காட்டிலும் ஹேர் கட் செய்வதற்கு முன்பே தங்களின் முக அமைப்பு என்ன அதற்கு எந்தவிதமான ஹேர் கட் பொருந்தும் என்பதை தெளிவாக யோசித்து முடிவெடுத்து பின் சலோனிற்கு செல்லுங்கள்.

கூந்தல் எக்ஸ்டென்ஷன் பாதுகாப்பானதா? உங்கள் கூந்தலை எக்ஸ்டெண்ட் செய்யும் முன்பு இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்…!

hair cut 4

வட்ட வடிவ முக அமைப்பு:

வட்ட வடிவ முகம் அல்லது உருண்டையான முக அமைப்பு உடையவர்களுக்கு முகம் நன்கு பரந்து அகலமான தோற்றம் உடையதாக இருக்கும். இவர்கள் முகத்தை சற்று நீல வடிவமாக காட்டக்கூடிய ஹேர் கட் களை தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. காதின் பின்புறம் சிறிது முடி இருக்கும் படி லேயர் கட் செய்து கொள்ளலாம். முடியின் அடர்த்தியை பொருத்தப்படி 90 டிகிரி லேயர் கட்,  1 டிகிரி லேயர் கட், கிராஜுவேட் லேயர் கட் என தேவையான லேயர் கட்டை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

நீள் வட்ட வடிவ முக அமைப்பு:

நீள் வட்ட வடிவ முக அமைப்பு உடையவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. காரணம் அனைத்து விதமான ஹேர் கட் களும் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். எந்தவிதமான முடி அமைப்பும் இவர்களுக்கு அழகான தோற்றத்தையே தரும் எனவே தைரியமாக புதிய ஹேர் கட்களை முயற்சி செய்யலாம்.

ஹார்டின் வடிவ முக அமைப்பு:

ஹார்டின் வடிவ முக அமைப்பு உடையவர்களுக்கு நெற்றி பெரிதாகவும் தாடை குறுகிய வடிவிலும் இருக்கும். இவர்களுக்கு ஃபரண்ட் பேங்க்ஸ், ஃபிரின்ஜ் கட் போன்ற ஹேர் கட்கள் பொருத்தமாக இருக்கும்.

முக்கோண வடிவ முக அமைப்பு:

முக்கோண வடிவ முக அமைப்பு உடையவர்களுக்கும் நெற்றி பரந்து நீளமாகவும் தாடை குறுகிய படியும் இருக்கும். இவர்கள் யூ கட் அல்லது வி வடிவ கட் முயற்சி செய்து பார்க்கலாம். ஹைபோனிடைல் இந்த விதமான முக அமைப்பிற்கு எடுப்பாக இருக்கும்.

சதுர வடிவ முக அமைப்பு:

சதுர வடிவ முக அமைப்பு உடையவர்களுக்கு நெற்றி தாடை கன்னங்கள் என அனைத்துமே சம அளவில் இருக்கும். எனவே இந்த விதமான முக அமைப்பு உடையவர்கள் ஸ்கொயர் கட் அல்லது தோள்பட்டை வரையிலான யு வடிவ கட் முயன்று பார்க்கலாம்.

hair cut 2

இதில் உங்களின் முக அமைப்பு எது என்று முடிவு செய்து அதற்கான ஹேர் கட்டை தேர்ந்தெடுங்கள். பெண்கள் தங்களின் நீளமான முடியை கட் செய்வதை வேண்டாம் என்று நினைத்தால் குறைந்த பட்சம் மாதத்திற்கு ஒருமுறை முடியின் அடிப்பகுதியை சிறிதளவு டிரிம் செய்து கொள்ளுதல் நல்லது. நீங்கள் மேற்கொள்ளும் ஹேர் கட் ஆனது உங்களின் வயதை அதிகப்படுத்தி காட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews