ராமர் கோயிலில் அப்செட்டான ரஜினிகாந்த்?.. சூப்பர் ஸ்டார் கேட்டே முடியாதுன்னு சொல்லிட்டாங்களா?..

ராமர் கோவில் திறப்பு விழா இன்று அயோத்தியில் பிரமாண்டமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் நிகழ்சியில் கலந்துக்கொள்ள நேற்று உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு புறப்பட்டனர்.
மேலும், விமான நிலையத்தில் தனுஷும் தனது மகன்களுடன் அயோத்திக்கு சென்ற காட்சிகள் வெளியாகின. இந்நிலையில், அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் 500 வருட போராட்டம் முடிவுக்கு வந்தது என கூறிச் சென்றார்.

வெள்ளை வேட்டி, சட்டை மற்றும் தோளில் துண்டை போர்த்திக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

மனைவியுடன் அயோத்தி சென்ற ரஜினிகாந்த்:

ரஜினிகாந்த் அருகே அவரது மனைவி லதா ரஜினிகாந்த் அமர்வதற்கு அவர் இடம் கேட்டு மறுக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேட்டும் கோயில் நிர்வாகி மறுத்த நிலையில், அவர் அப்செட் ஆகி விட்டதாக கூறுகின்றனர்.

ராமர் பக்தனான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனுமான அபிஷேக் பச்சனும் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட காட்சியும் வெளியாகியுள்ளன. மேலும், அவர் அயோத்தி ராமர் கோயில் அருகே சராயு என்னும் இடத்தில் 10,000 சதுர அடியில் வீட்டு மனையை பல கோடி கொடுத்து வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பாலிவுட் நட்சத்திரங்களான கங்கனா ரனாவத், ரன்பீர் கபூர், அலியா பட், கத்ரீனா கைப், விக்கி கௌஷல் மற்றும் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி போன்றோர் கலந்துக்கொண்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.

ரஜினிகாந்த் அப்செட்:

மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவரது மகன் ராம்சரண் ஆகியோர் ராமர் கோயிலுக்குள் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும், கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராத் கோலி ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருகே சச்சின் அமர்ந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

நாடு முழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் நேற்று முதல் அயோத்தியில் குவிந்து வருகின்றனர். அயோத்தியில் ஒரே நேரத்தில் 100 விமானங்களை நிறுத்த முடியாது என்பதால், சிறப்புவிருந்தினர்கள் வரும் விமானங்கள் அருகில் உள்ள மற்ற விமான நிலையங்களில் நிறுத்தப்பட உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் நேற்று லக்னோ விமான நிலையத்தில் இறங்கி இன்று காலை அங்கிருந்து அயோத்திக்கு காரில் சென்றனர்.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் நேற்று விமானங்கள் மூலம் லக்னோவுக்கு வந்தனர். அவர்கள் லக்னோவில் இருந்து அயோத்திக்கு சாலை வழியாக செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல சினிமா பிரபலங்கள் அயோத்தியில் ராமரை தரிசித்து வழிபாடு நடத்தினர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews