துருவ நட்சத்திரம் ரிலீஸ் என்னாச்சு..! இன்னும் பஞ்சாயத்து முடிக்காத கௌதம் வாசுதேவ் மேனன்

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சித்திரம் படம் இன்று ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது வெளியாவதில் இன்னும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்து இயக்கிய படம் துருவ நட்சத்திரம். இதில் விக்ரம், ரீத்து வர்மா, சரத்குமார், ராதிகா, சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்தப் படம் அவ்வப்போது நிதி நெருக்கடியால் தள்ளிப் போய் தற்போது அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸ்-க்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன. வெகுநாட்களுக்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இதில் கம்பேக் கொடுத்துள்ளார்.

தள்ளிப்போன ரிலீஸ் தேதி

இன்று அனைத்து திரையரங்குகளிலும் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் புக்கிங் தொடங்கியது. இதனால் பல சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் புக் செய்து இந்த வருடத்தின் கடைசி மெகா படத்தினை காண ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனென்றால் கௌதம் மேனன் தனது சூப்பர் ஸ்டார் என்ற இன்னொரு படத்திற்காக ஆல் இன் பிட்சர்ஸ் என்ற நிறுவனத்திடம்  ரூ.2.40 கோடி கடன் பெற்றுள்ளதாகவும், ஆனால் படத்தையும் முடிக்காமல் பணத்தையும் திருப்பித் தரவில்லை என வழக்குத் தொடரப்பட்டது. மேலும் தங்களுக்குரிய பணத்தை தராமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்நிறுவனம் மனுவில் தெரிவித்திருந்தது.

சமந்தாவை பிரிந்தாலும் சகல வசதியுடன் வாழும் நாக சைதன்யா!.. அடேங்கப்பா இத்தனை கோடி சொத்து இருக்கா?..

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பட நிறுவனத்திடம் இருந்து வாங்கிய பணத்தை நாளை காலைக்குள் தராவிடில் படம் வெளியிடக் கூடாது என்ற நிபந்தனை விதித்தது.

இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்ட பதிவில் கூறியிருப்பதாவது, “துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று திரைக்கு வர முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம்.

ஆனால் இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. உலகம் முழுக்க, அட்வான்ஸ் புக்கிங் மற்றும் முறையான திரைகள் வழியாக அனைவருக்கும் நல்ல அனுபவத்தை தருவோம் என்று நம்புகிறேன் . இன்னும் ஒரு சில நாட்கள் தான் படம் விரைவில் வெளியாகும்“ என்று பதிவிட்டிருக்கிறார்.

Published by
John

Recent Posts