சமந்தாவை பிரிந்தாலும் சகல வசதியுடன் வாழும் நாக சைதன்யா!.. அடேங்கப்பா இத்தனை கோடி சொத்து இருக்கா?..

நடிகர் நாக சைதன்யா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். டோலிவுட் ரசிகர்கள் நாக சைதன்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டோலிவுட் ஹிரோவாக நடித்து பல ஹிட்படங்களை கொடுத்த நாகாஅர்ஜுனாவுக்கும் அவரது முன்னாள் மனைவி லக்ஷ்மி டகுபதிக்கும் பிறந்த மகன் தான் நாக சைதன்யா. இவர் ஜோஷ் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். மேலும், 100% காதல், தடாகா, பிரேமம், மஜிலி, லவ் ஸ்டோரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து நடிகை சமந்தாவை திருமணம் செய்துக்கொண்டார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பிரியப்போவதாக அறிவித்து அவர்களது திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டனர்.

நாக சைதன்யா பிறந்தநாள்:

கணவரிடம் எந்தவொரு ஜீவனாம்சமும் வாங்காமல் சமந்தா விலகி விட்டதாக தகவல்கள் வெளியானது. மனைவி சமந்தா மயோசிடிஸ் பாதிப்பால் அவதிப்படும் போது அவரை நாக சைதன்யா சந்தித்ததாகவும், ஆனால் தனக்கு யார் துணையும் உதவியும் தேவையில்லை என சமந்தா மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தியில் அமீர் கானின் லால் சிங் சத்தா படத்திலும், தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்திலும் நடித்திருந்தார். ஆனால், அந்த இரு படங்களும் அவருக்கு பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. மனைவி சமந்தா விட்டுப் பிரிந்ததில் இருந்தே தொடர்ந்து தோல்வி முகத்தையே சந்தித்து வருகிறார் நாக சைதன்யா.

சம்பளமும் சொத்து மதிப்பும்:

நாக சைதன்யா ஒரு படத்துக்கு 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் விளம்பரங்களில் நடிக்க 2 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தெரியவந்துள்ளது.

நடிகர் நாக சைதன்யாவுக்கு ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் தந்தை நாகார்ஜுனா வீடுக்கு அருகே தனியாக சொந்த வீடு உள்ளது. மேலும், சொகுசு கார்களையும் வைத்துள்ளார். மொத்தமாக 154 கோடி ரூபாய் வரை நாக சைதன்யாவிடம் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தண்டேல் ஃபர்ஸ்ட் லுக்:

நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அல்லு அரவிந்த் வழங்கும், ‘தண்டேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நாக சைதன்யா ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் நீண்ட முடி மற்றும் தாடி உடன் முரட்டுத்தனமாக கையில் துடுப்புடன் ஒரு படகில் அமர்ந்திருக்கிறார். அவர் இந்த திரைப்படத்தில் மீனவராக நடிக்கிறார். இந்த தோற்றத்திற்காக கடந்த சில மாதங்களாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார். படத்தின் தலைப்பை போல் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் நாக சைதன்யாவின் தோற்றம் பவராக இருக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதுவரை பார்காத தோற்றத்தில் நாக சைதன்யா நடித்து வருகிறார், இப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக தயாராக உள்ளது. நாக சைதன்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது. 154 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ள நாக சைதன்யா கூடிய விரைவிலேயே தந்தை நாகார்ஜுனாவை போல 2வது திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.