பொழுதுபோக்கு

தோனியின் அரிய சாதனையை தூள் தூளாக்கி சாம்சன் செஞ்ச சம்பவம்.. ரோஹித், கோலியால நெருங்கவே முடியல..

ஐபிஎல் தொடர், பல வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான அடிப்படை காரணமாக இருந்த நிலையில் அந்த வகையில் சஞ்சு சாம்சன், சாஹல் மற்றும் ஷிவம் துபே என பல வீரர்கள் இந்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலக கோப்பையிலும் இடம்பிடித்துள்ளனர்.

இதில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன் தனது அணியை சிறப்பாக வழிநடத்தி வருவதுடன் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த முறை ஒரு சில முக்கியமான போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வி அடையும் நிலையில் இருந்த போதும் கூட தனியாளாக போராடி சஞ்சு சாம்சன் வெற்றியை தேடித் தந்திருந்ததால் உலக கோப்பை அணியிலும் இடம் கிடைத்துள்ளது.

இப்போது இருக்கும் ஃபார்மை நிச்சயம் டி 20 உலக கோப்பையிலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நிரூபித்தால் நிச்சயம் உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக சஞ்சு சாம்சன் விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி இருந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு அணியை வெற்றி பெற வைக்கும் முயற்சியிலும் இறங்கி இருந்தார்.

46 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் எடுத்து அவர் அவுட்டான சூழலில் அவரது விக்கெட் மிகப்பெரிய அளவில் சர்ச்சையும் உருவாக்கி இருந்தது. இதனால், அவர்கள் தோல்வி அடைந்தாலும் சஞ்சு சாம்சனின் ஃபார்ம் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை மிடில் ஆர்டரில் கொடுத்துள்ளது. இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான ஒரு சாதனையை படைத்து அசத்தியுள்ளார் சஞ்சு சாம்சன்.

ஐபிஎல் வரலாற்றில் 200 சிக்ஸர்களை அடித்த பத்தாவது பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் மாறி உள்ளார். இதில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 357 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில் அவருக்கு அடுத்த இடத்தில் 276 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மாவும், 258 சிக்ஸர்களுடன் விராட் கோலியும் உள்ளனர்.

மேலும் இந்த வரிசையில் தோனி 248 சிக்ஸர்களையும், சுரேஷ் ரெய்னா 203 சிக்ஸர்களையும் அடித்த இந்திய வீரர்களாக இருந்த நிலையில் தான் தற்போது சஞ்சு சாம்சன் 200 சிக்ஸர்களை கடந்து இந்த பட்டியலில் பத்தாவது வீரராக இணைந்துள்ளார். ஆனால் அதே வேளையில் இருநூறு சிக்ஸர்களை ஐபிஎல் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் அடித்த இந்திய வீரர் என்ற சிறப்பையும் தோனியை முந்தி சாதனை படைத்துள்ளார் சாம்சன்.

தோனி 200 சிக்ஸர்களை 165-வது இன்னிங்சில் எட்டி இருந்த நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் அதனை முறியடித்து 159 இன்னிங்சிலேயே 200 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரராக பெருமை சேர்த்துள்ளார்.

Published by
Ajith V

Recent Posts