துருவ நட்சத்திரம்: கெளதம் மேனனின் சினிமாட்டிக் யுனிவர்ஸ்!

கிளாசிக் லவ் ஸ்டோரிகளின் இயக்குனர் என்ற பெயர் கெளதம் மேனனுக்கு பொருத்தம். சினிமாவில் முக்கால்வாசி படங்கள் காதல் கதைகள் தான்.

சில படங்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. அப்படிப்பட்ட காதல் படங்களை இந்த தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் கொடுத்தார். காதல் கதையில் ஒரு ரிச்னஸ், கிளாஸி என எல்லாம் கலந்திருக்க கெளதம் மேனனுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இன்ஜினியரிங் படித்த கெளதம் மேனன், சினிமா தான் தன்னுடைய வாழ்க்கை என்பதை முடிவு செய்திருந்தார். படிக்கும் போதே, மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணத்தாண்டி வருவாய் ஆகிய படங்களுக்கான கதைகளை எழுதி வைத்திருக்கிறார்.

படித்து முடித்ததும், விளம்பர படங்களை இயக்க சென்றுவிட்டார். பின் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து ‘மின்சார கனவு’ படத்தில் பணிபுரிந்திருக்கிறார். மின்சார கனவு படத்தில் ஒரு காட்சியில் நடித்தும் இருப்பார்.

பின்னர் ‘மின்னலே’ படத்தினை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மாதவன், அப்பாஸ், ரீமாசென் நடித்த படம் ‘மின்னலே’. இவர்களுடன் விவேக்கின் காமெடி மிகப்பெரிய ப்ளஸ். இந்தப் படத்தின் மூலம் தான் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு கௌதம் மேனனுக்கு மெகா ஹிட்டாக அமைந்த படம் ‘காக்க காக்க’.

இந்தப்படத்தில் ஹீரோவாக மாதவன், விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்த இருவருமே மறுத்து விட்டனராம். படத்தில் ஹீரோயினாக ஜோதிகா முடிவாகியிருந்த நிலையில், அவர் தான் சூர்யாவை அணுகி பார்க்கும்படி கூறி இருக்கிறார். சூர்யா சம்மதித்து அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார் படமும் இன்றும் கொண்டாடப்படும் படமாக உள்ளது.

கமல்ஹாசனுடன் ‘வேட்டையாடு விளையாடு’. இது போன்ற போலீஸ் பின்னணி கொண்ட கதைகளை இயக்கி வந்த கெளதம் மேனன் இயக்கிய ‘விண்ணாத்தாண்டி வருவாயா’ கிளாசிக் டைப்பாக இருந்தது. இதற்கு முந்தைய படங்கள் போலீஸ் கதைகளாக இருந்தாலும், மெல்லிய லவ் ஸ்டோரி டச் இருக்கும்.

ஆனால், ‘விண்ணாத்தாண்டி வருவாயா’ படத்தில் காதல் மணம் பெருக்கெடுத்து வீசும். சிம்பு, திரிஷாவின் ஜோடி பொருத்தம் கச்சிதமாக இருந்தது. தொடர்ந்து படங்களை இயக்கிய வந்த கெளதம் மேனன் திடீரென பொருளாதார சிக்கலில் சிக்கிருக்கிறார்.

கடைசியாக அவர் இயக்கி வந்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தை பாதியிலேயே விட்டு விட்டு நடிக்க போய் விட்டார். சமீபத்தில் வெளிவந்த சில படங்களில் அவர் நடித்துள்ளார்.

நடிப்பதற்கான வாய்ப்பு குவிந்து வரும் நிலையில், நடித்து கொண்டே ‘துருவ நட்சத்திரம்’ படத்தை முடிப்பதற்கான வேலைகளையும் செய்திருக்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரீலிஸ்-க்கு தயாராகிவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. விக்ரம், ரீத்துவர்மா நடித்திருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ வரும் நவம்பர்-24 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முடிவில் துருவ நட்சத்திரம் பார்ட் 2விற்கான லீட் கொடுத்திருப்பதாக கூறியுள்ளனர். இந்த படம் வெளிவந்தால் இது, கெளதம் மேனனின் சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கும் என்று கெளதம் வாசுதேவ் மேனன் கூறியிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews