குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நாளை தசரா விழா

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகேயுள்ளது குலசேகரப்பட்டினம் இந்த ஊரில் உள்ளது குலசேகரப்பட்டினம முத்தாரம்மன் கோவில். இப்பகுதிகளில் புகழ்பெற்ற கோவிலான இக்கோவிலில் சாமியிடம் நேர்த்தி வைத்து எனது கோரிக்கையை நிறைவேற்று நான் குறிப்பிட்ட வேடம் அணிந்து உன் ஆலயம் வருகிறேன் என வேண்டிக்கொள்வார்கள்.

அதன்படி கோரிக்கை நிறைவேறப்பெற்ற பக்தர்கள், வித்தியாசமான வேடங்களில் இந்த நவராத்திரி நாட்களில் செல்வார்கள். வித்தியாசமான வேடங்களை அணிந்து யாசகம் பெற்று கோவிலுக்கு சென்று செலுத்துவார்கள்.

நவராத்திரி 10 ம் நாளான விஜயதசமி அன்று குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன் அசுரனை அம்புவிட்டு அவனை அழிப்பாள்.

இந்த வருடம் கொரோனாவை காரணம் காட்டி இந்த நிகழ்ச்சிக்கு பக்தர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews