தாறுமாறாக எகிறிய தனுஷின் மார்கெட்!.. 200 கோடிக்கு லாபத்தை அள்ளித் தருகிறாராம்.. எப்படி தெரியுமா?..

உலகளவில் நடிகர் தனுஷின் மார்க்கெட் அதிரடியாக 200 கோடி வரை எகிறி இருப்பதாக ஆச்சர்யத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் நடிக்கும் படங்கள் 100 கோடி வசூலை எட்டத் தொடங்கி உள்ளன. அவருக்கு பின்னாடி அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சிவகார்த்திகேயனே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை தொடர்ந்து பல படங்களில் கொடுத்து கெத்துக் காட்டி வருகிறார்.

அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தனுஷ். அடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் சைக்கோவாக நடித்த தனுஷ், திருடா திருடி படத்தில் கமர்ஷியல் நாயகனாக மாறினார். ஒரு பக்கம் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றிமாறன் படங்களிலும், இன்னொரு பக்கம் காமெடி, கமர்ஷியல் படங்கள் என மாறி மாறி நடித்து அசத்தி வருகிறார் கர்ணன்.

200 கோடிக்கு உயர்ந்த தனுஷ் மார்க்கெட்

திடீரென பாலிவுட்டில் அமிதாப் பச்சன் சட்டையை பிடித்து சண்டை போடுபவராக ஷமிதாப் படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான ராஞ்சனா திரைப்படம் இந்தியிலேயே 100 கோடி வசூலை ஈட்டியது. அதன் பின்னர் பிரெஞ்சு படத்தில் நடித்த தனுஷ், அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான தி கிரே மேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

உலகளவில் தனது மார்க்கெட்டை உயர்த்திய நடிகர் தனுஷ் இந்த ஆண்டு வாத்தி படத்தில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். இதுவரை பாக்ஸ் ஆபிஸில் தனுஷ் படங்கள் 100 கோடி வரை தான் வசூல் ஈட்டி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு உரிமம், ஓடிடி, சாட்டிலைட் உரிமம் என ஒட்டுமொத்தமாக தனுஷ் படங்கள் 200 கோடி ரூபாய் பிசினஸை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராயன் படத்தை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ், வரும் பொங்கலுக்கு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தனுஷின் மார்க்கெட் உயர்ந்திருப்பதை பார்த்த அவரது ரசிகர்கள் தனுஷின் வளர்ச்சியை கண்டு பெருமைப்பட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.